tamilnadu

img

படந்தாலுமூடு சோதனை சாவடியில் காவல் உதவி ஆய்வாளர் சுட்டுக்கொலை

நாகர்கோவில், ஜன.9- தமிழக-கேரள எல்லை சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவியாளர் துப்பாக்கியால் சுட்டு  கொல்லப்பட்டார். சிசிடிவி காட்சி மூலம் இரண்டு நபர்கள் தப்பி ஓடுவதும், அவர்கள் யார் என்பதும் தெரிய வந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தா ண்டம் அருகே பருத்திவிளை பகுதியை சேர்ந்தவர் வில்சன் (57). காவல்துறை பணியில் 1986ஆம் ஆண்டு சேர்ந்த இவர்  கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் மார்த்தா ண்டம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார்.  இந்நிலையில் புதனன்று இரவு 8 மணி அளவில் அவர் படந்தாலுமூடு சோதனைச் சாவடியில் காவல் பணிக்கு சென்றார். இரவு 10 மணியளவில் அங்கு வந்த இருவர் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சனை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பிச் சென்று விட்டனர். துப்பாக்கிச் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
அரசு மரியாதை
ரத்த வெள்ளத்தில் கிடந்த வில்சனை மீட்டு குழித்துறை பகுதியில் உள்ள மருத்துவ மனையில் சேர்த்தனர். ஆனால் மருத்துவ மனைக்கு செல்லும் வழியில் அவர் உயி ரிழந்தார். பின்னர் அவரது உடல் உடற் கூறாய்வுக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. உடற் கூறாய் வுக்கு பின்னர் அவரது உடல் மார்த் தாண்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. முன்னதாக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைத்து வில்சன் உடலுக்கு காவல் துறையினர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்ட அவரது உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து அறிந்த மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் ஆகி யோர் உடனடியாக சம்பவ இடம் வந்து பார்வையிட்டனர். மேலும் மருத்துவக் கல்லூரிக்கு சென்று அவரது உடலை பார்த்தனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் உத்தர வின்பேரில் முதற்கட்டமாக 8 தனிப்படை கள் அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கியது.  மேலும் மாவட்டம் முழுவதும் வாகன சோதனைகள் முடுக்கிவிடப்பட்டன. காவல்துறையினர் சோதனை சாவடி அரு கில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவு களை ஆய்வு செய்தனர். அதில் குற்ற வாளிகள் இருவரும் கொலை செய்து  விட்டு காரில் தப்பிச் செல்வது பதிவாகி யுள்ளது. கேமராவில் பதிவான உருவங் களை வைத்து, அப்துல் சமீம் மற்றும் அவ ரது கூட்டாளி தவ்பீக் ஆகியோர் சேர்ந்து காவல் உதவி ஆய்வாளரை சுட்டுக் கொன்றிருக்கலாம் என காவல் துறையினர் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தமிழக - கேரள காவல் துறையினர் இணைந்து குற்றவாளிகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.  தேடப்படும் நபர்களுக்கு தீவிரவாத அமைப்பின் தொடர்பு உள்ளதாகவும், ஏற்கனவே, கொலை உள்ளிட்ட குற்ற வழக்கில் தொடர்பு உடையவர்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
டிஜிபி திரிபாதி வருகை
வியாழனன்று தமிழக டிஜிபி திரிபாதி, திருவனந்தபுரம் சென்று கேரள டிஜிபி லோக்நாத் பெஹ்ராவை சந்தித்து பேசி னார். பின்னர் டிஜிபி திரிபாதி, களியக்கா விளை வந்து சம்பவ இடத்தை ஆய்வு செய்தார். கேரள டிஐஜி சந்தோஷ் குமார் களியக்காவிளைக்கு நேரில் வந்து விசார ணை நடத்தினார். மேலும் கேரள சட்டமன்ற உறுப்பினர் ஹரீந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஆர்.செல்ல சுவாமி மற்றும் நிர்வாகிகள் களியக்கா விளை பகுதிக்கு வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர். கொல்லப்பட்ட காவல் ஆய்வாளர் வில்சன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட இருசக்கர வாகன விபத்தில் படு காயம் அடைந்து மூன்று மாத சிகிச்சை க்குப் பிறகு கடந்த 3 ஆம் தேதி தான் மீண்டும் பணிக்கு வந்துள்ளார். இவருக்கு ஏஞ்சல் மேரி என்ற மனைவியும் ஆன்ட்ரீஸ் ரெமிஜா மற்றும் வினிதா என்ற மகள் களும் உள்ளனர். வில்சன் வரும் மே மாத த்துடன் ஓய்வு பெற இருந்தது குறிப்பிடத்தக்கது.