tamilnadu

img

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எழுச்சிமிகு போராட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எழுச்சிமிகு போராட்டம் இடைவிடாமல் தொடர்கிறது. தில்லியில் பல்வேறு பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் தொடர்ந்து வகுப்பு புறக்கணிப்பு, உள்ளிருப்புப் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். அம்பேத்கர் பல்கலைக் கழகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களிடையே உரையாற்றுவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் அவரை உள்ளே நுழையவிடாமல் பல்கலைக் கழகத்தின் கதவை இழுத்து மூடியது நிர்வாகம். இதை எதிர்த்து மாணவர்கள் முழக்கமிட்டனர். கதவுகள் மூடப்பட்ட போதிலும், போராட்டமும், அவரது முழக்கமும் கைவிடப்படவில்லை. இரும்பு கேட்டுக்கு ஒருபுறம் பிரகாஷ் காரத் உரையாற்ற, மறுபுறம் மாணவர்கள் உன்னிப்பாக அவரது உரையை கவனித்தனர்.