tamilnadu

img

10 சதவீத இட ஒதுக்கீடு மாநில அரசுகளே முடிவு எடுக்கலாம் -மத்திய அரசு

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான 10 சதவிகிதம்  இடஒதுக்கீட்டு வழங்குவது குறித்த மாநில அரசே முடிவு செய்துகொள்ளலாம் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 
பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மத்திய அரசு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வகையில் மத்திய அரசு சட்டம் கொண்டுவந்துள்ளது. 
இந்நிலையில் தமிழகத்தில் கல்வி வேலைவாய்ப்பு உட்பட அனைத்து துறைகளிலும் 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.இந்த மனுவிற்கு மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் என்று மத்திய அரசு தனது பதில் மனுவில் தெரிவித்துள்ளது. 
 

;