ஈரோடு, ஜன. 1- ஈரோடு மாவட்டத்தில் குழந்தைகள் தொடர் பான ஆபாச படத்தை பதிவிறக்கம் செய்து சேமித்து வைப்பது, பார்ப்பது மற்றும் மற்றவர்களுக்கு அனுப்புவது போன்ற செயல்களில் ஈடுபடுவர் களை காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். குழந்தைகள் தொடர்பான ஆபாச படங் களை பதிவிறக்கம் செய்வது, சேமித்து வைப் பது, மற்றவர்களுக்கு அனுப்புவது போன்ற சம்ப வங்கள் தடை செய்யப்படுள்ளது. இந்த சம்பவங் களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவ டிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள் ளது. இந்த எச்சரிக்கையை மீறி ஒரு சிலர் குழந்தை கள் ஆபாச படத்தை பதிவிறக்கம் செய்வது பார்ப் பது, மற்றவர்களுக்கு அனுப்புவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களை காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இதுபற்றி ஈரோடு மாவட்ட காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், குழந்தைகளின் ஆபாச படம் பார்ப்பது, பதிவிறக்கம் செய்வது மற்றும் மற்றவர்களுக்கு அனுப்புவது போன்ற செயல்க ளில் ஈடுபட்ட 2 பேர் சென்னையில் கைது செய் யப்பட்டு உள்ளனர். இதனை தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ள 30 பேரின் தகவல்களை காவல்துறையினர் சேகரித்துள்ள னர். அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக் கப்பட உள்ளது. இதேபோல், ஈரோடு மாவட் டத்திலும் குழந்தைகளின் ஆபாசப் படங்களை பார்ப்பவர்களின் நடவடிக்கை ரகசியமாகவும், அதே நேரத்தில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளவர்கள் இதனை உடனடியாக நிறுத்தி கொள்ள வேண்டும். இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.