வெள்ளி, மார்ச் 5, 2021

tamilnadu

முழுகொள்ளளவை எட்டும் பவானிசாகர் அணை

ஈரோடு,டிச.31- பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவ தால் 3 ஆவது முறையாக அணை முழு கொள்ளளவை எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் இரண்டாவது பெரிய அணையான பவானி சாகர் அணையின் முழு கொள்ளளவு 105 அடி ஆகும். சமீபத்தில் பெய்த தென்மேற்கு பருவ மழையால் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 2 முறை அணை நிரம்பியது. இதனால் உபரி நீர் பவானி ஆற்றுக்கு திறக்கப் பட்டது. மேலும் பாசனத்துக்காக வாய்க்கால்களிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் மூலம் மாவட்டம் முழு வதும் நெற்பயிர்கள், வாழை மற்றும் பல்வேறு பயிர்கள் சாகு படி செய்யப்பட்டு உள்ளன. நெற்பயிர்கள் நன்கு வளர்ந்து மாவட்டம் முழுவதும் பசுமையாக காட்சி அளிக்கிறது. இந்த நிலையில் தற்போது பவானிசாகர் அணைக்கு கணிசமாக தண்ணீர் வரத்து இருந்து கொண்டே தான் இருக் கிறது. செவ்வாயன்று காலை 9 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 1779 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையின் நீர் மட்டம் 104.95 அடியாக உள்ளது. மாலை முழுகொள்ளளவை 3 ஆவது முறையாக எட்டும் நிலையில் உள்ளது.  இந்நிலையில் காலிங்கராயன் வாய்க்காலுக்கு மட்டும் வினாடிக்கு 200 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப் பட்டு வருகிறது.

;