tamilnadu

ஈரோட்டில் ஒரே நாளில் ரூ.2.70 லட்சம் பறிமுதல்

ஈரோடு, ஏப்.12-ஈரோடு மாவட்டத்தில் வியாழனன்று ஒரே நாளில் மட்டும் தேர்தல் பறக்கும் படையினரால் ரூ.2.70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் கடந்த 10 ஆம் தேதி வரை, ரூ. 2 கோடியே 1 லட்சத்து 93 ஆயிரத்து 816 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. வியாழனன்று பெருந்துறையில் ரூ. 1 லட்சமும், பவானியில், ரூ. 1.16 லட்சமும், அந்தியூரில் ரூ. 60 ஆயிரமும் என மொத்தம் ரூ. 2.76 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.இதுவரை ரூ. 2 கோடியே, 4 லட்சத்து, 69 ஆயிரத்து, 816 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு, உரிய ஆவணங்களை வழங்கியதால், ரூ. 1 கோடியே 65 லட்சத்து 97 ஆயிரத்து 956 பணம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ. 38 லட்சத்து 71 ஆயிரத்து 860 பணம் கருவூலத்தில் செலுத்தப்பட்டுள்ளது என தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.