ஜபல்பூர், (ம.பி.):
மத்தியப் பிரதேசம் மாநிலம், ஜபல்பூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சங்கல்ப் பரிஹாஸ்-ராணி தம்பதியினர்.
இவர்கள் சென்னை ரயிலில் பயணம்செய்யும் போது ஒருவர் சில மா மரக்கன்றுகளை வழங்கியிருந்தார். பரிஹாஸ்-ம் அவரது மனைவி ராணியும்தங்கள் தோட்டத்தில் இரண்டு மரக்கன்றுகளை நட்டு வளர்த்துள்ளனர். அவை சாதாரண மா மரங்களாக வளரும் என்று நம்பினர். முதிர்ச்சியடைந்ததும் மரங்களில் காய்த்த மாம்பழங்கள் மஞ்சள் நிறமாகவோ பச்சை நிறமாக இல்லாமல் கருஞ் சிவப்பு நிறத்தில் இருந்தது கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து விசாரித்தபோது ஜப்பான் வகை மியாசாகி மாம்பழம் என்றும் இதைஅதிக விலைக்கு விற்கலாம் என்றும் கூறியுள்ளனர்.
கடந்தாண்டு மியாசாகி மாம்பழம்குறித்து அறிந்த சிலர் இவர்களதுதோட்டத்திற்குள் புகுந்து மாம்பழங் களை திருடிச் சென்றுள்ளனர். ஆயினும் மரங்களை தம்பதியினர் காப்பாற்றியுள்ளனர். இதையடுத்து தற்போது அந்தத் தம்பதியினர் மாம்பழங்களைப் பாதுகாக்க நான்கு பணியாளர்களை வேலைக்குநியமித்துள்ளனர். நான்கு நாய்களை யும் காவலுக்கு நிறுத்தியுள்ளனர்.இந்தத் தம்பதியினர் கடந்தாண்டு மியாசாகி மாம்பழங்களை ஒரு கிலோ ரூ.2.70 லட்சத்திற்கு விற்றுள்ளனர்.சர்வதேச சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படும் இந்த மாம்பழங்களை கடந்த ஆண்டு தங்கள் தோட்டத்திற்குள் புகுந்த திருடர்கள் திருடிச் சென்றதால் தற்போது காவலர்களையும், நாய்களையும் காவலுக்கு வைத்துள்ளதாக தெரிவித்த தம்பதியினர், கடந்த ஆண்டு ஒரு கிலோ மாம்பழத்தை ரூ.2.70 லட்சத்திற்கு விற்பனை செய்ததாக தெரிவித்துள்ளனர். தற்போது இந்தத் தம்பதியினர் மாம்பழங்களுக்கான ஆர்டர்களைப் பெறத் தொடங்கியுள்ளதுடன் பல சலுகைகளையும் அறிவித்துள்ளனர். குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு ஒரு மாம்பழம் ரூ.21 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மாம்பழங்களில் பீட்டா கரோட்டின், ஃபோலிக் அமிலம் மற்றும் ஆக்சிஜ னேற்றங்கள் நிறைந்துள்ளன. இந்தப் பழங்கள் பார்வைக் குறைபாடுகளை போக்குவதில் சிறந்த பங்குவகிக் கிறது. இந்த அரிய வகை சிவப்பு மாம்பழங்கள் ஜப்பானில் மியாசாகி நகரில் தான் முதன்முதலில் பயிரிடப்பட்டது.
லைவ் மிண்ட் இணைய இதழ்