கோபி, ஜன. 19- 5ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அந்தந்த பள்ளிகளிலேயே நடை பெறும். வேறு இடத்திற்கு மாற்றப் பட மாட்டாது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங் கோட்டையன் கூறியுள்ளார். கோபி பேருந்து நிலையத்தில் ஞாயிறன்று (ஜன.10) போலியோ சொட்டு மருந்து முகாம் நடந்தது. அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் கலந்து கொண்டு குழந்தை களுக்கு சொட்டு மருந்து ஊற்றி முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:- தமிழகத்தில் 5ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அந்தந்த பள்ளி களிலேயே நடைபெறும். வேறு இடத்திற்கு மாற்றப்பட மாட்டாது. வதந்திகளை நம்ப வேண்டாம். மத்திய அரசின் கேந்திரிய வித்யா லயா பள்ளிகள் அந்தந்த தாலுக் காக்களில் அமைப்பது குறித்து தமிழக முதல்வர் முடிவு செய்வார். ஜல்லிக்கட்டு குறித்து பாடப் புத்த கங்களில் சேர்ப்பதாகச் சொல்ல வில்லை. சி.டி மூலமாகத்தான் வழங்கப்படும் என்றுதான் தெரி விக்கப்பட்டுள்ளது. பெரியார் பற்றி ரஜினிகாந்த் பேசியதால், அவர் மீது காவல் நிலை யங்களில் பலர் புகார் கொடுத்து வருகிறார்கள் என்பது குறித்து கேட்டதற்கு, இது பற்றி நடிகர் ரஜினி யைத் தான் கேட்க வேண்டும் என்றார்.