tamilnadu

img

பவானி சாகர் அணையில் மீன்பிடி உரிமையை வழங்குக!

ஈரோடு, ஜுலை 7- உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி, பவானி சாகர் அணையில் மீன்பிடி குத்தகை உரி மையை மீனவர் கூட்டுறவு சங்கங்களுக் கே வழங்க வலியுறுத்தி பவானிசாகரில் வெள்ளியன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் பவானிசாகர் மற்றும் சிறு முகை கூட்டுறவு சங்கங்கள் சார்பில் 1200 க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித்து வாழ்ந்து வருகிறார்கள். இங்கு மீன்பிடிக்கும் குத்தகை உரிமையானது மீன்வளத்துறை மற்றும் மீன்வளர்ச்சி கழகத்தால் தனியாருக்கு விடப்பட்டதை எதிர்த்து மீனவர் கூட்டுறவு சங்கங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு அண்மையில் தடையாணை பெறப்பட்டது. இந்த வழக்கு மற்றும் தமிழ்நாடு முழுவதுமிருந்து 30 க்கும் மேற்பட்ட உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்கள் தொடுத்த வழக்குகள் அனைத்திற்கும் பொருந்தும். தீர்ப்பில் ஏரி, குளங்களில் (அணைகள் சேர்த்து) மீன்பிடிக்கும் குத்தகை உரிமையை அரசாணை எண் 332 ன்படி உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கே முன்னுரிமை என்று தெளிவாக குறிப்பிடப்பட்டது. ஆனால், இதற்கு மாறாக பவானிசாகர் அணையில் மீன்பிடிக்கும் குத்தகை உரிமையை மீண்டும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு செய்து மீன்வளத்துறை உத்த ரவு பிறப்பித்துள்ளது. இதனை எதிர்த்து  கடந்த மாதம் 20 ஆம் தேதி முதல் பவானி சாகர் மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, கடந்த 3ஆம் தேதி பேச்சுவார்த்தை நடை பெற்றது. இதில் தனியாருக்கு ஆதர வாக, சட்டவிரோதமான நிலை பாட்டையே மீன்வளத்துறை அதிகாரிகள் வலியுறுத்தினர்.

இத்தகைய சட்டவிரோத நடவடி க்கையை கண்டித்தும், உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகள் மீது  நடவடிக்கை எடுக்கக்கோரியும், பவானி சாகர் அணையில் மீன்பிடிக்கும் குத்தகை  உரிமையை உடனடியாக மீனவர் கூட்டு றவு சங்கங்களுக்கு வழங்கக் கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  பவானி சாகர் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, பவானிசாகர் மண்டல அனைத்துவகை உள்நாட்டு மீன்பிடி மற்றும் மீன் விற்பனை தொழிலாளர்கள் சங்க தலைவர் எம்.சுப்பிரமணியம் மற்றும் சிறுமுகை மீனவர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் எம்.மூர்த்தி ஆகியோர் தலைமை ஏற்றனர். பொதுச்செயலாளர் எல்.சேகர் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு (சிஐடியு) மாநில பொதுச்செயலாளர் எஸ்.அந்தோணி, சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்ர மணியன், விதொச மாவட்டத் தலைவர் ஆர்.விஜயராகவன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தில், 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் பங்கேற்றனர். இந்த கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் ஆகஸ்ட் 3ஆம் தேதியன்று  பவானிசாகர் அணையில் இறங்கி மீன்பிடித்தும், கோரிக்கை நிறைவேறும் வரையில் பரிசலிலேயே இருந்தும், மேடேறாமல் போராட்டம் நடத்துவது என்றும் அறிவிக்கப்பட்டது. முடிவில், சங்கத்தின் துணைத்தலைவர் எம்.பொங்கியண்ணன் நன்றி கூறினார்.