tamilnadu

ஈரோடு மற்றும் கோவை முக்கிய செய்திகள்

போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள வழிபாட்டு தளங்களை அகற்ற கோரிக்கை

ஈரோடு, ஜூலை 1- நீதிமன்ற வழிகாட்டல்படி போக்குவரத்திற்கு இடை யூறாக உள்ள வழிபாட்டுத்தளங்கள் அகற்றப்பட வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் திவிக சார்பில் மனு கொடுக்கப்பட்டது. ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலுக்கு அருகில் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டிலுள்ள இடத்தில் அன்னதான மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. இது போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி சாலைப் போக்குவரத்திற்கு இடையராக உள்ள அனைத்து மத வழிபாட்டுத்தளங்களையும் அகற்ற வேண்டும்.  இதுபற்றி ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகி யோரிடம் புகார் தெரிவித்தும், இது வரை எந்த நட வடிக்கையும் எடுக்கப்படவில்லை.  தொடர்ந்து கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த அன்னதான மண்டபத்தை ஆளும் கட்சியினரே கட்டுவதால் அதைத் தடுக்க முடியவில்லை. அதேநேரம் அப்பகுதியில் பொதுக்கழிப்பிடம் எதுவும் இல்லை, இதனால் மக்களுக்கு பயன்படும் வகை யில் அதற்கு அடுத்த இடத்தில் தூய்மை இந்தியா திட்டத் தில் பொதுக்கழிப்பிடம் கட்டலாம். அவ்வாறு, காட்டுவ தற்கான செலவையும் நாங்களே ஏற்றுக்கொள்கிறோம் என வலியுறுத்தி திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவனிடம் இரத்தினசாமி மனு அளித்துள்ளார்.

காவல் ஆய்வாளரை கத்தியை காட்டி மிரட்டல் இந்து முன்னணி பிரமுகர் கைது

கோவை, ஜூலை 1– காவல்துறையின் பாதுகாப்பை விலக்கிக்கொண்ட ஆத்திரத்தில் காவல்துறை அதிகாரியிடம் கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்த இந்து முன்னணி நிர்வாகி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.  கோவை, போத்தனூர் அற்புதம் நகரை சேந்தவர் சுரேஷ். இவர் இந்து முன்னணியின் மாவட்ட செயலாளராக இருந் துள்ளார். இவருக்கு இரண்டு காவலர்கள் 24 மணிநேரமும் பாதுகாப்பு அளித்து வந்தனர்.  இந்நிலையில் இவர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளூர் அளவிலான பொறுப் பில் நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து காவல்துறை யினரின் பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்தி ரமடைந்த சுரேஷ் ஞாயிறன்று இரவு மது போதை யில் சாலையில் போவோர் வருவோரிடம் தகறாறு செய் துள்ளார். கத்தியுடன் இவர் செய்த தகராறால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்தனர். இதுகுறித்து போத்தனூர் காவல்துறையினருக்கு வந்த தகவலையடுத்து ஆய்வாளர் உதயகுமார் சம்பவ இடத்திற்குச் சென்று சுரேஷிடம் வீட் டுக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். ஆனால் சுரேஷோ  எனக்கு பாதுகாப்பு அளித்துவிட்டு இப்போது என்னையே மிரட்டுகிறாயா எனக்கேட்டு கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.  இதனையடுத்து கூடுதல் காவல் துறையினர் வர வழைத்து சுரேஷை கைது செய்தனர். இவர் மீது கொலை மிரட்டல் விடுத்தது, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தது, பொது இடத்தில் ஆயுதத்தோடு தகறாறு செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து இந்து முன்னணி நிர்வாகி சுரேஷை சிறையில் அடைத்தனர்.