tamilnadu

கருப்பு பட்டையுடன் பணி புரியும் மருத்துவர்கள்

 ஈரோடு, ஜூன் 15- கொல்கத்தாவில் மருத் துவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஈரோடு அரசு மருத்துவமனையில் மருத் துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து சனியன்று பணி யாற்றினர். மேற்கு வங்கத்தில் பயிற்சி மருத்துவர்கள் தாக் கப்பட்டதைக் கண்டித்தும், மருத்துவர்களுக்குப் பாது காப்பு வழங்கக் கோரியும் ஈரோடு அரசு மருத்துவ மனை மருத்துவர்கள் 69 பேர், ஆரம்ப சுகாதார நிலை யங்களில் பணி புரியும் மருத் துவர்கள் 150 பேர் மற்றும் இஎஸ்ஐ மருத்துவர்கள் 4  பேர் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியைத் தொடர்ந்தனர். கண்டனத் தையும், பாதுகாப்பையும் வலியுறுத்தி நாளையும் கருப்பு பேட்ஜ் அணியும் போராட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.