ஈரானில் அணுமின் நிலையம் அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரான் நாட்டில் உள்ள புஷேர் அணு உலைக்கு 53 கி.மீ கிழக்கே பூமிக்கு அடியில் 38 கி.மீ ஆழத்தில் வெள்ளியன்று காலை 5.23 மணியளவில் நிலநடுக்கம் மையம் கொண்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அணு உலையில் சேதம் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.