tamilnadu

img

துணைவேந்தர் நியமன அதிகாரத்தை தாரைவார்த்த அதிமுக அரசு

சென்னை, மார்ச் 7- திராவிடர் கழகத் தலைவர்  கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கை: வரலாற்றுப் பெருமை வாய்ந்த சென்னை பல்கலைக் கழகமும்கூட வெளிமாநிலத்தவருக்கோ அல்லது பார்ப்பனர்களுக்கோ தலைமைப் பதவியாகிய துணைவேந்தர் பதவி தாரை வார்க்கப்பட ஏற்பாடு மும்முரமாக நடைபெறுகிறதோ என்ற அச்சம் கல்வியா ளர்களிடையே, சமூகநல ஆர்வலர்களிடையே பரவலாக ஏற்பட்டுள்ளது.

ஜே.என்.யூ. என்று அழைக்கப்படும் டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக துணைவேந்தர் ஜெகதீஷ்குமாரை தமிழக ஆளுநர் நியமித்திருப்பது வன்மையான கண்ட னத்திற்குரியது ஆகும்! அவர்மீது ஏற்கெனவே புகார்கள் கூறப்பட்டுள்ளன என்பது கவனத்தில் கொள்ளத்தக்கதாகும். இதற்கு மூலாதாரமாக, உடந்தையாக இருப்பது தமிழக அ.தி.மு.க. முதலமைச்சரும், உயர்கல்வித் துறை அமைச்சரும் ஆவர். துணைவேந்தர்களின் தேர்வும், நியமனமும் ஆளுநர் பெயரால் வந்தாலும், உண்மையில் தமிழக அரசால், அதன் முதல்வரால், அமைச்சரவையால் நியமிக்கப்படும் முறை நீண்ட கால நடைமுறையாகும் மாநில அரசின் அதிகாரத்தை, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வந்தவுடன், அதிமுக அரசு  ‘‘தாரை’’ வார்த்துவிட்டது. இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார்.