tamilnadu

img

காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திடுக!

பொய் வழக்கை திரும்பப் பெற இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தல்

சென்னை, ஜூலை 18- மாணவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்பப் பெறவும், மாணவர் சங்க தலை வர்களை மிரட்டும் காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் இந்திய மாண வர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் மாநிலத் தலை வர் ஏ.டி.கண்ணன், செயலாளர் வீ.மாரியப்பன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: பல்கலைக்கழக மானியக்குழு செப்டம்பர் இறுதிக்குள் கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைன் அல்லது ஆப் லைன் மூலமாக தேர்வு நடத்த வேண்டும் என்று கடந்த ஜுலை 6 ஆம் தேதி அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது. கொரோனா பேரிடர் காலத்தில் தேர்வு நடத்தி னால் மாணவர்களுக்கு நோய்த்தொற்று பரவும் ஆபத்துள்ளது.  இந்தியாவில் ஆயிரக்கணக்கான கிராமங் கள் 24 மணிநேர மின்சார வசதியின்றி இருக்கும் போது அனைவருக்கும் ஆன்லைன் தேர்வு என்பது சாத்தியம் இல்லை. இது கல்வி வாய்ப்பில் மிகப்பெரிய ஏற்ற தாழ்வுகளை உருவாக்கு வதோடு ஏழை,எளிய பெரும்பான்மையான மாணவர்களை கல்வியிலிருந்து வெளி யேற்றவே பயன்படும். ஆகவே இத்தேர்வை கொரோனா பேரிடர் காலத்தில் நடத்தாதே, முந்தைய பருவத்தேர்வின் அடிப்படையில் தேர்ச்சி வழங்கிடு என நாடு முழுவதும் இந்திய மாணவர் சங்கம் போராட்டம் நடத்தி வருகிறது. தமிழகத்தில் 28 மாவட்டங்களில் 45 மையங்க ளில் போராட்டம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் நடை பெற்ற போராட்டத்தில் மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன். மாவட்டத் தலைவர் வினிஷா, நவின் உள்ளிட்ட 15 நபர்கள் மீது காவல்துறை, இந்திய தண்டனைச் சட்டம் 143, 285, 269, 271 ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் மாநில துணைச் செயலாளர் ஆறு, பிரகாஷ். மாவட்டச் செயலாளர் சுர்ஜித், ஆனந்த் உள்ளிட்ட 10 பேர் மீதும், தஞ்சாவூரில் மாவட்ட செய லாளர். அரவிந்த், வீரையன், உள்ளிட்ட 10 நபர்கள் மீதும் புதுக்கோட்டையில் மாவட்ட செயலாளர் ஜனார்த்தனன், ஓவியா உள்ளிட்ட 15 மாணவர்கள் மீதும் புதுச்சேரி செயலாளர் வின்னரசன், ஜெயப்பிரகாஷ், உள்ளடக்கிய 3 நபர்கள் மீதும் கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்திருக்கி றது தமிழக காவல்துறை.

மாணவர்களின் உயிரைப் பாதுகாக்க ஜன நாயக முறையில் போராடியவர்கள் மீது போடப்பட்ட பொய்வழக்கை உடனே வாபஸ் பெற வேண்டும். மேலும் தூத்துக்குடி மாவட் டத்தில் தலைமை தபால் நிலையம் முன்பு மாவட்டச் செயலாளர் ஜாய்சன் தலைமையில் போராட்டம் நடைபெற்ற போது ‘உள்ள புடிச்சி போட்டு கொன்றுவேன்’ என தூத்துக்குடி தெற்கு காவல்நிலைய ஆய்வாளர் கிருஷ்ண குமார், சார்பு ஆய்வாளர் ராஜாமணி ஆகி யோர் மாணவத் தலைவர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். தொடர்ந்து ஊரடங்கு காலத்தில் போலீஸ் மக்கள் மீது வன்முறை யைப் பிரயோகிப்பதோடு போராடுபவர்களைப் பழிவாங்குவதற்கான வாய்ப்பாக இந்தச் சூழ லைப் பயன்படுத்தி வருவது கண்டிக்கத்தக்க செயல் ஆகும். ஆகவே தமிழக அரசு காவல்துறைக்கு உளவியல் நலப் பயிற்சி மற்றும் மனித உரிமைகள் குறித்த அடிப்படை களைப் பயிற்றுவிக்க வேண்டுமென இந்திய மாணவர் சங்கம் தமிழ்நாடு மாநிலக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என்று அறிக்கையில் கூறியுள்ளனர்.