tamilnadu

img

தலைவர்கள் வாக்களித்தனர்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு சென்னை தி.நகர் சிஐடி நகரில் உள்ள அரசு பள்ளியில் வாக்களித்தார்.

................


திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் சென்னையில் வாக்களித்தார்.

................


தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது வாக்கை நெடுங்குளம் ஊராட்சியில் பதிவு செய்தார்.

................


புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தனது தொகுதியில் வாக்களித்தார்.

................


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் ஏ.கே.பத்மநாபன் கொளத்தூரிலுள்ள சாம்தாரியா காலனி, துவக்கப் பள்ளியில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.

................


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி., சென்னை தி.நகரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் மேல்நிலைப்பள்ளியில் வாக்களித்தார்.

................


ஸ்ரீரங்கம் தெற்கு சித்திரை வீதியில் மாநகராட்சி துவக்கப் பள்ளியில் சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் கே.வரதராசன் வாக்களித்தார்.

................


சென்னை நீலாங்கரையில் உள்ள சன்பீம் மெட்ரிக் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி வாக்களித்தார்.

................


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன் வட சென்னை மக்களவை தொகுதியில் உள்ள கம்பர் நகர் டானிஷ் மெட்ரிகுலேசன் பள்ளியில் வாக்களித்தார்.

................


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா சென்னை தி.நகர் சிஐடி நகர் தக்கர்பாபா வித்யாலயா பள்ளியில் வாக்களித்தார்.

................


திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சென்னை அடையாறு - கஸ்தூரிபாய் நகர், காமராஜர் அவென்யூவில் உள்ள பாப்பான் சாவடி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடியில் வாக்களித்தார்.

................


திமுக பொருளாளர் துரைமுருகன் தனது சொந்த ஊரான வேலூர் மாவட்டம் காட்பாடியில் வாக்களித்தார்.

................


திமுக மாநிலங்களவை உறுப்பினரும் தூத்துக்குடி தொகுதியின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளருமான கனிமொழி தென்சென்னை மக்களவை தொகுதியில் வாக்களித்தார்.