tamilnadu

img

அறிவுரை கூறாத அதிகாரிகள்; செல்லாமல் போன ஓட்டுகள்

திண்டுக்கல்,ஜன.3- உள்ளாட்சித் தேர்தலில் வாக்குச்சீட்டு முறையைப் பின்பற்றுவதால் செல்லாத ஓட்டு கள் அதிகளவில் விழ வாய்ப்புள்ளது என்றும்  எனவே வாக்காளர்கள் மற்றும் தேர்தல் அதி காரிகள் கவனமாக இருக்க வேண்டும் என்றும்  தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. திண்டுக்கல் சீலப்பாடி பஞ்சா யத்தில் நடைபெற்ற தேர்தலில் பெரும்பாலா னவை செல்லாத ஓட்டுகளாக அறிவிக்கப்ப ட்டுள்ளது. ஒரு வாக்குச்சீட்டில், 3 அல்லது 4  சின்னங்கள் அல்லது பெயர்கள் இடம் பெற்றி ருந்தது.இதில்  வாக்காளர்கள், தாங்கள் தே ர்ந்தெடுத்த சின்னத்தை மட்டும் கிழித்து  அதனை வாக்குப்பெட்டியில் போட்டு வந்து ள்ளனர். தற்போது வாக்குச்சீட்டைப் பிரிக்கு ம்போது தான் அவை தெரியவந்துள்ளது. இத னால் அந்த வாக்குகள் செல்லாது என்று அறி விக்கப்பட்டுள்ளது.

திருச்சி பேரூர் காவேரி பொறியியல் கல்லூ ரியில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ண ப்பட்டன. இதில் ஓட்டுச்சீட்டுகளில் பலவற்றில் இரு சின்னங்களுக்கு முத்திரை குத்த ப்பட்டிருந்தது. இதில் ஒரு சிலர் முத்திரை க்குப் பதில் பேனாவால் டிக் செய்துள்ளனர். ஒரு  சிலர் கையெழுத்து போட்டுள்ளனர். சிலர் விரல்  ரேகையைப் பதிவு செய்துள்ளனர். திண்டுக்க ல்லில் பல வாக்குச் சீட்டுகள் கிழிக்கப்பட்டி ருந்தது போலவே இங்கும் கிழிக்கப்பட்டி ருந்தன. பலர் முத்திரை குத்தாமல், வாக்குச் சீட்டை கொடுத்ததைக் கொடுத்தபடியே வாக்குப் பெட்டியில் போட்டுச் சென்றுள்ள னர். இதனால் பெரும்பாலான வாக்குகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டது. அந்த  வாக்குச் சீட்டுகளை செல்லாது என்று முத்தி ரையிட்டு தேர்தல் அதிகாரிகள் கையெழு த்திட்டுள்ளனர். வாக்குச்சாவடியிலிருந்த அதிகாரிகள் முன்கூட்டியே உரிய அறிவுரை வழங்கி யிருக்க வேண்டும் என்று பலர் தெரிவித்துள்ள னர்.