tamilnadu

img

ஆறடி உயரம் வளர்ந்த மாப்பிள்ளை சம்பா நெற்பயிர்

முன்மாதிரியாக திகழ்ந்த பாபநாசம் விவசாயி

தஞ்சாவூர், ஜன.4- தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் கணபதி அக்ரஹாரத்தில் ஆறடி உயரம் வளர்ந்துள்ள மாப்பிள்ளை சம்பா நெற்பயிரை அப்பகுதி விவசாயிகள் நேரில் பார்த்து வியந்து வரு கின்றனர். கணபதி அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் (60). இவர் தனது வயலில் ரசாயன உரம் எதுவும் பயன்படுத்தாமல் இயற்கை முறை யில், பாரம்பரிய நெல் ரகமான “மாப்பிள்ளை சம்பா” நெல் ரகத்தை பயிரிட்டுள்ளார். இந்த நெற்பயிர் தற்போது ஆறடி உயரம் வளர்ந்துள்ளது. நெற்பயிர் நன்றாக தூர் வெடித்தும் காணப்படுகிறது. ஒவ்வொரு கதிரி லும் 400-க்கும் குறையாத நெல் மணிகள் விளைந்துள்ளன. இதனை அப்பகுதியில் உள்ள விவசாயிகள் ஆர்வத்தோடு நேரில் பார்த்து வியந்து எப்படி நடவு செய்வது என கேட்டு செல்கின்றனர்.

இதுகுறித்து விவசாயி சீனிவாசன் கூறி யதாவது: எனக்கு மொத்தம் 20 ஏக்கர் நிலம் உள்ளது. ரசாயன உரம் பயன்படுத்தி குறுகிய கால நெற்பயிர்களை நடவு செய்து அறுவடை செய்து வந்தேன். இதில் மகசூல் குறைந்து தான் கிடைக்கும். ஆனால் செலவு கூடும். ஆனா லும் ஒரு விவசாயி லாப நட்ட கணக்கு பார்க்கக் கூடாது என்பதால் தொடர்ந்து அதையே செய்து வந்தேன். நெல் சாகுபடியையும் இயற்கையில் செய் தால் என்னவென்று தோன்றியது. கடந்த சில ஆண்டுகளாகவே நெல் சாகுபடியை இரசாய னம் பயன்படுத்தாமல் இயற்கை முறையில் செய்வது குறித்து நன்கு தெரிந்து கொண்டே இந்த முறை களத்தில் இறங்கினேன். முதல் தடவை மொத்த நிலத்திலும் பயிரிட வேண்டாம் என்பதால், ஒரு ஏக்கர் நிலத்தில் மட்டும் பயிரிட முடிவு செய்தேன். அதன்படி பாரம்பரிய ரகமான “மாப்பிள்ளை சம்பா” விதை நெல் இரண்டு கிலோ வாங்கி அதனை பாய் நாற்றங்கால் முறையில் விதைத்தேன்.

பின்னர் நெற்பயிரை வயலில் நடவு செய்தேன். இதற்கு முன்பாக வயலை தண்ணீர் விட்டு உழவு ஓட்டியதுடன் சரி வேறு எதுவும் செய்யவில்லை, அத்துடன் இரசாயன உர மும் பயன்படுத்தவில்லை. ஆரம்பத்திலேயே நல்ல உயரத்தில் பயிர் வளரத் தொடங்கியது. அதன் பிறகு அவ்வப்போது தொடர்ச்சியாக மழை பெய்தது, அதனால் பயிருக்கு தண்ணீர் இறைக்கும் வேலையும் மிச்சமானது.  காற்று மற்றும் தண்ணீரில் உள்ள நைட்ர ஜனை கொண்டே பயிர்கள் வளர்ந்து வந்தன. தற்போது நடவு நட்டு 123 நாள் ஆகிறது. பயிர் ஆறடி உயரம் வரை வளர்ந்து நிற்குது. நான் வய லுக்குள் இறங்கினால் என்னை நெற்பயிர்கள் மறைத்து விடுகின்றன. இன்னும் 30 லிருந்து 40 நாட்களுக்குள் அறுவடை செய்து விடலாம். அத்துடன் ஒவ்வொரு கதிருக்கும் 400-க்கு மேற்பட்ட நெல்மணிகள் விளைந்துள்ளன. மாப்பிள்ளை சம்பா நல்ல உயரம் வளரும் என கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இந்த அளவுக்கு வளர்ந்து இருப்பது பெரும் ஆச்சர் யத்தை தருகிறது.

இரசாயன உரம் பயன்படுத்தி நடவு செய் தால் விளைச்சல் நன்றாக இருப்பது இல்லை. அத்துடன் செலவும் பல மடங்கு ஆகிறது. குறிப்பாக விவசாய வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பது இல்லை, அத்துடன் இரசாயன உரங்கள் வாங்கி அதனை தெளிக்கவும், இடை யில் களை எடுக்கவும் என நடவு தொடங்கி அறு வடை வரை பெரிய தொகை செலவாகிறது. பாரம்பரிய ரகத்தை இயற்கை முறையில் பயி ரிட்டதால் செலவு பாதியாக குறைந்து விட்டது. செலவை தவிர்க்கவே பாரம்பரிய ரகத்தை பயிரிட்டேன். இப்போது மனசும், மண்ணும் நிறைஞ்சு இருக்கு. குறிப்பாக எல்லோரும் குறு கிய கால நெல் ரகங்களை நடவு செய்வதற்கே ஆர்வம் காட்டுகிறோம். அந்த அரிசியை உண்ப தால் நெற்பயிரை போலவே எல்லோருடைய ஆயுசும் குறைகிறது.  நம் முன்னோர்கள் நாள்கள் அதிகம் எடுத்து கொண்டாலும் பரவாயில்லை என பாரம்பரிய ரகங்களை விளைவித்தனர், அதனை உண்டு நூறு வயசுக்கு மேல் வாழ்ந்துள்ளனர். இதில் கிடைக்கும் வைக்கோல் கால்நடைகளுக்கும் நல்ல தீவனமாவதுடன் அவையும் நல்ல திட மாக இருந்து வளர்ந்து உள்ளது. இனி என்னு டைய எல்லா வயல்களில் மாப்பிள்ளை சம்பா  ரகம் நெல் தான் பயிரிட முடிவு செய்துள்ளேன்” என்றார்.

;