tamilnadu

img

கோவையில் இடதுசாரிகள் கைது

குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கோவை, ஜன.4-   குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்தும், ஜனவரி 8 அகில இந்திய வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மார்க் சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப் பினர் பி.ஆர்.நடராஜன் உள்ளிட்ட இடதுசாரி கட்சியினர் கைது செய்யப் பட்டனர். இந்திய மக்களின் மீது மோடி அரசின் தொடர் தாக்குதலை கண்டித் தும், தேசிய குடியுரிமை சட்ட திருத் தத்தை திரும்பப் பெற வேண்டும். அதற்கு எதிராகப் போராடிய மக் கள் மீது தொடுக்கப்பட்ட தாக்கு தலை கண்டித்தும், மக்களின் பொரு ளாதார வாழ்வு உரிமைகள் மீது தொடர்ந்து தொடுக்கப்படும் தாக்கு தல்களை கண்டித்தும், இந்திய பொதுத்துறை நிறுவனங்களை தனி யார்மயமாக்கும் மோடி அரசின் நட வடிக்கையை கண்டித்தும் ஜனவரி 8 அன்று அகில இந்திய பொது வேலை நிறுத்த போராட்டத்திற்கு மத்திய தொழிற்சங்கங்கள் அறை கூவல் விடுத்துள்ளது.

இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் இடது சாரிக் கட்சிகள் போராட்டங்களை நடத்தி வருகிறது.  இதன் ஒருபகுதியாக கோவை யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோவை சிவானந்தா காலனி பவர்ஹவுஸ் முன்பு வேலைநிறுத்த ஆதரவு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி்ஆர்.நடராஜன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில், மத்திய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கை களை கண்டித்து ஆவேச முழக்கங் களை எழுப்பினர். இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் வி.இராம மூர்த்தி, மாநிலக் குழு உறுப்பினர் சி. பத்மநாபன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வி.எஸ்.சுந்தரம், முன்னாள் எம்எல்ஏ ஆறுமுகம், சிவசாமி, தேவராஜ் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிலையில், போரா ட்டத்துக்கு அனுமதி மறுத்து அனை வரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.