இந்தோனேசியாவில் மலையிலிருந்து ஆற்றுக்குள் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.
சுமத்திரா தீவின் தெற்கு பகுதியான பாகர் ஆலமில் உள்ள மலையில் சென்று கொண்டிருந்த பேருந்து, திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள ஆற்றுக்குள் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஏற்கனவே 24 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மேலும் 4 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 28ஆக உயர்ந்துள்ளது.