இந்தோனேசியாவில் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது.
இந்தோனேசியாவில் இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தலைநகர் ஜகார்த்தா உள்ளிட்ட பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான மக்கள் வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். நகரின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தோனேசிய வெள்ளத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது.
பொதுப்போக்குவரத்துத் தளங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.