tamilnadu

img

அமெரிக்காவில் அதிகரித்துவரும் போராட்டங்கள்

டிரம்புக்கு வாஷிங்டன்  பிஷப் எதிர்ப்பு

வாஷிங்டன், ஜுன் 3- பதுங்கு குழியில் தஞ்சமடைந்ததாக கூறப்பட்ட நிலையில் படைபலத்துடன் திங்களன்று பைபிளை கைகளில் ஏந்தியபடி அமெரிக்க அதிபர் டிரம்ப் தேவாலயம் சென்றார். அப்போது, அமெரிக்காவில் பரவி வரும் போராட்டங்களை மாகாண ஆளுநர் களும், மேயர்களும் ஒடுக்கவில்லை என்றால் ராணு வத்தை அனுப்ப உள்ளதாக தெரிவித்துள்ளார்.

பிசாசு தெருவின் மறு பக்கத்தில்...

ஜார்ஜ் ப்ளாயிட் என்கிற கறுப்பினத்தவரை வெள்ளைக்கார காவல்துறையினர் நிறவெறி யுடன் கழுத்தை நெரித்து பொதுமக்கள் முன்பு  கொடூரமாக கொலை செய்தனர். மே 25 ஆம் தேதி நடத்த இந்த கொடுமைக்கும், நீடித்து வரும் நிறவெறிக்கு எதிராகவும் அமெரிக்கா முழுவதும் பெரும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. வழக்கத்துக்கு மாறாக வெள்ளை மாளிகை அமை ந்துள்ள பகுதியிலும் பெருமளவில் மக்கள் திரண்டு போராடி வருகின்றனர். டிரம்பை குறிப்பிட்டு, ‘பிசாசு தெருவின் மறுபக்கத்தில்’ என்கிற வாசகத்தை வெள்ளை மாளிகையின் எதிரில் உள்ள சுவரில் போராட்டக்காரர்கள் எழுதியிருந்தனர்.     இந்நிலையில் திங்களன்று நாட்டு மக்களிடம் உரையாற்றிய டிரம்ப் போராட்டக்காரர்களை எதிர் கொள்ள பெருமளவில் ஆயுதங்களுடன் ராணு வத்தையும், சட்ட அமலாக்கத் துறையினரையும் அனுப்ப உள்ளதாக அறிவித்தார். மாகாண ஆளு நர்கள், மேயர்களின் திறமையின்மையே போராட்ட ங்கள் அதிகரிக்க காரணம் என்றார். தேவைக்கு ஏற்ப தேசிய காவல் படையை நிலை நிறுத்த ஆளு நர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. வன்முறைகள் அடக்கப்படும் வரை சட்ட அமலாக்கப் படைகள் இருப்பதை ஆளுநர்களும் மேயர்களும் உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.  ஏதேனும் மாகாணமோ நகரமோ அதை மறுத்தால் ராணுவத்தை இறக்கி உடனடியாக பிரச்சனைக்கு முடிவு கட்டப்படும் என்றார்.

ஜோபிடன் கிண்டல்

மேலும் அவர் கூறுகையில், இங்கே தலை நகரில், லிங்கன் நினைவு மற்றும் இரண்டாம் உலகப் போர் நினைவுச்சின்னங்கள் அழிக்கப் பட்டன. மிகவும் வரலாற்று சிறப்புமிக்க தேவா லயங்களில் ஒன்று அழிக்கப்பட்டது. மிகவும் சிறப்பு வாய்ந்த இடத்திற்கு நான் மரியாதை செலுத்தப் போகிறேன் என அறிவித்தார்.  பின்னர் டிரம்ப் வெள்ளை மாளிகைக்கு அருகிலுள்ள செயின்ட் ஜான்ஸ் எபிஸ்கோபல் தேவாலயத்திற்குசென்றார். டிரம்ப் சென்ற வழியில் உள்ள லாபாயெட் பூங்கா வில் இருந்து போராட்டக்காரர்களை கண்ணீர்ப்புகை மற்றும் ரப்பர் தோட்டாக்களை பயன்படுத்தி வெளியேற்றினர். 

பெருமளவிலான உளவுத்துறையினரின் துணையுடனும் அரசியல் தேவைக்காக கையில் பைபிளுடனும் டிரம்ப் தேவாலயம் சென்றதை வாஷிங்டன் பிஷப் மரியான் பூட் உள்ளிட்ட ஆன்மீக தலைவர்கள் விமர்சித்துள்ளனர். பிலடல்பியா சிட்டி ஹாலில் பேசிய ஜனாதிபதி தேர்தல் போட்டி யாளரும் முன்னாள் துணை ஜனாதிபதியுமான ஜோ  பிடன், டிரம்ப் “பைபிளை தூக்கிக் காட்டியதற்குப் பதில் அதைத் திறந்து படித்திருந்தால் எதை யாவது கற்றிருக்கலாம்” என்று குறிப்பிட்டார்.

பாசிச எதிர்ப்பு அமைப்பு

ஒரு வாரத்திற்கும் மேலாக நடந்துவரும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வன்முறைகள் அமெரிக்காவிற்கு நூற்றுக்கணக்கான கோடி டாலர்  மதிப்பில் இழப்பை ஏற்படுத்தியுள்ளன. 100 க்கும் மேற்பட்ட நகரங்களில் போராட்டங்கள் தொடர் கின்றன. ஆறு மாகாணங்கள் மற்றும் 13  முக்கிய நகரங்களில் அவசரநிலை அறிவிக்கப்ட்டுள்ளது.  நாடு முழுவதும் 67,000 க்கும் மேற்பட்ட தேசிய காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். நான்கா யிரத்துக்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டனர். பாசிச எதிர்ப்பு இடதுசாரி ஆண்டிபா இந்த வன்முறைக்கு பின்னால் இருப்பதாக கடந்த வாரம் குற்றம் சாட்டிய டிரம்ப், அவர்களை உள்நாட்டு பயங்கரவாதிகள் என்று அறிவித்தார்.

கலிபோர்னியா கடலோரப் பகுதிகளில் இருக்கும் சான் பிரான்சிஸ்கோ, சான் ஜோஸ், சாண்டா கிளாரா, ஓக்லேண்ட் உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கை மீறி போராட்டங்கள் நடக்கின்றன. அப்பகுதிகளில் வன்முறைச் சம்பவங்களும் சூறையாடல்களும் நடந்துள்ளன. மினாசோட்டா தலைநகர் மினாபொலிஸில் ஜார்ஜ் ப்ளாய்ட் மரணமடைந்த சதுக்கத்தில் பல்லாயிரம் போரா ட்டக்காரர்கள் கூடியுள்ளனர். ஜார்ஜ் ப்ளாய்ட் இறுதி நிகழ்ச்சி ஜுன் 9ஆம் தேதி நடைபெற உள்ளது.

ஜார்ஜ் பிளாய்ட் கொலை: வீடியோ எடுத்த 17 வயது சிறுமி பேட்டி

அமெரிக்காவின் மினாபொலிசில், கடந்த மே 25-ஆம் தேதி ஜார்ஜ் பிளாய்ட், (46) என்ற ஆப்ரிக்க அமெரிக்கரை ஒரு காவலர் சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து  விசாரிக்கிறார். தொடர்ந்து அவரை தரையில் தள்ளி அவரது கழுத்தை தன் கால்  முட்டியாமல்  தாக்கியுள்ளார். இதில், மூச்சுவிட முடியாமல், பிளாய்டு, அதே இடத்தில் உயிரிழந்தார். இது சமூக வலைதளங்களில் வீடியோவாக வைரலாக பரவியது. கடந்த மே 25-ஆம் தேதி மினாபொலிஸ் நகரில் கடைக்கு வந்த ஜார்ஜ் பிளாய்ட், 20 டாலர் கொடுத்து சிகரெட் கேட்டுள்ளார். அந்த டாலர் போலியானது என்பதை கண்டுபிடித்த கடைக்காரர் காவல்துறையை வரவழைத்துள்ளார். காரில் வந்த நான்கு காவலர்களில் ஒருவர்  (சவ்வின்) ஜார்ஜ் பிளாய்ட் கைகளை பின்னால் கட்டி குப்புற படுக்க வைத்து கழுத்தை தனது முட்டிக் காலால் நெருக்கியுள்ளார். கிட்டத்தட்ட 8 நிமிடங்கள் 46 வினாடிகள் முட்டிக்காலால் பிளாய்ட் கழுத்து நெரு க்கினார். இதனால் பிளாய்ட் மூச்சுவிட முடியாமல்தவித் தார். ஒரு கட்டத்தில் பிளாய்ட் சுயநினைவை இழந்த பின்பும் அந்தக் காவலர் தனது காலை எடுக்கவில்லை.  

சவ்வின் தவிர  மற்ற மூன்று முன்னாள்  அதிகாரிகள், தாமஸ் லேன், ஜே.அலெக்சாண்டர் குயெங், டூ தாவோ ஆகியோர் பிளாய்ட் கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்  காவல்துறையின் மிருகத்தனத்தையும், இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் உணர்ந்த வேதனையையும் நிரூபிக்கும் விதமாக இந்த வீடியோவை பிரேஷியர் எடுத்துள்ளார். அதன் விளைவாக துன்புறுத்தல்களுக்கு தற்போது அவர் ஆளாகியுள்ளார்.

பிரேஷியரின் முகநூலில் பல்வேறு கருத்து க்கள் பதிவிடப்பட்டுள்ளன. அதையும் அவர் எதிர்கொண்டு வருகிறார். குறிப்பாக, “நீங்கள் ஏன் காவல்துறையினருடன் சண்டையிடவில்லை எனக் கேள்வியெழுப்பியுள்ளனர். இதற்கு பதிலளித்த பிரேஷியர்  காவல்துறையை எதிர்த்துப் போராடவோ, பிளாய்ட்டுக்கு உதவவோ  17 வயது நிரம்பிய எனக்கு பயமாக இருந்ததாகத் தெரிவித்துள்ளார். மேலும் ஜார்ஜ் பிளாய்ட்  கொல்லப்பட்ட இடத்திற்கு  மறுநாள் பிரேஷியர் சென்று ள்ளார். அங்கிருந்தவர்களிடம் அவர் இறப்பதை நான் பார்த்தேன் எனக் கூறும் வீடியோவும் வெளியாகி யுள்ளது.  காவல்துறைக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு போராட்டம் நடத்திய மக்கள் அவரை கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டுள்ளனர்.

“எல்லோரும் என்னிடம் கேட்கிறார்கள். எப்படி உணர்கிறீர்கள்  என்று? எப்படி உணர வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை, காரணம் அந்த சம்பவம் எனக்கு மிகுந்த வருத்தமாக உள்ளது. அந்த மனிதர் சம்பவத்தன்று இரவு எட்டு மணியளவில் இங்கே இருந்தார். நான் எனது உறவினரை கடைக்கு அழைத்துச் சென்று கொண்டிரு ந்தேன். அவர் தரையில் கிடப்பதைப் பார்த்தேன்” என்றும் விளக்கியுள்ளார். இந்த நிலையில் மிருகத்தனமாக நடந்துகொண்ட காவலரின்  நடவடிக்கைக்கு பிரேஷியா ஒரு சாட்சியாக உள்ளார். அவருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டுமென வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


 

;