tamilnadu

ஜிஎஸ்டி கவுன்சிலின் கூட்டம்

ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்தக் கூட்டத்தை இம்மாதம் 19-ஆம் தேதி நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.


தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 34-வது கூட்டத்தை நடத்துவதற்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறுவது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதனையடுத்து இக்கூட்டத்திற்கு தேர்தல் ஆணையம் தனது ஒப்புதலை அளித்துள்ளது.


ரியல் எஸ்டேட் துறை மீதான ஜிஎஸ்டி வரியைக் குறைப்பது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்பட உள்ளது. கடந்த ஜிஎஸ்டி கூட்டத்தில் பல்வேறு பொருட்களின் மீதான வரிகள் குறைக்கப்பட்டு 5 சதவீத வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த புதிய வரிவிதிப்பும் ஏப்ரல் முதல் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது.