tamilnadu

img

கோவை டிஎஸ்பி பாண்டியராஜனுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முறையீடு

கோவை டிஎஸ்பி பாண்டியராஜன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு முறையிடப்பட்டுள்ளது.


கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னா் திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் மதுக்கடைக்கு எதிராக பெண்கள் போராட்டம் நடத்தினர். அதில் போராடிய ஒரு பெண்ணை பலமாக கன்னத்தில் அறைந்தார். இதனால் அப்பெண்ணுக்கு செவித்திறன் குறைபாடு ஏற்பட்டது. இதற்கு பல பெண்கள் அமைப்பு கண்டனம் தெரிவித்தது. 


இந்நிலையில் டிஎஸ்பி பாண்டியராஜனிடம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு ஒப்படைக்கப்பட்ட போது, அதை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இதை ஏற்கும் விதமாக தமிழக அரசும் வழக்கை சிபிசிஐடி-க்கும், தற்போது சிபிஐ விசாரணைக்கும் மாற்றி உத்தரவிட்டுள்ளது. 


இந்த வழக்கு தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய டிஎஸ்பி பாண்டியராஜன். பொள்ளாச்சி வழக்கு குறித்து புகார் அளித்த பெண்ணின் பெயரை குறிப்பிட்டு பேசினார். உச்சநீதிமன்ற உத்தரவுப் படி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளின் பெயர் உள்ளிட்ட விவரங்களை ஊடகங்களிடம் தெரிவிக்கக்கூடாது. ஆனால் இவர் உச்சநீதிமன்ற உத்தரவையும் மீறும் வகையில் செய்தியாளர் சந்திப்பில் பேசினார். 


இதற்கு பலத்த கண்டனம் எழுந்த நிலையில், தவறுதலாக பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் வாய் தவறி வந்துவிட்டதாக டிஎஸ்பி பாண்டியராஜன் சமாளித்தார். எனினும், இவரது செயலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படவுள்ளது. அதில் டிஎஸ்பி பாண்டியராஜன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 



;