tamilnadu

img

தமிழகத்தில் ஒரு புதிய ரயில்பாதை திட்டத்தைக் கூட முடிக்காத மோடி அரசு

தமிழகத்தில் 8 புதிய ரயில்பாதைத்திட்டங்கள் காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் திட்டமிடப்பட்டு நிதி நிலை அறிக்கையில் சேர்க்கப்பட்டன. ஒரு திட்டம் மட்டும் 2016-17ல் மோடி அரசால் சேர்க்கப்பட்டது. இந்த எட்டு திட்டங்களுக்கும் ஐந்தாண்டுகளையும் சேர்த்து மோடி அரசு செய்த செலவு வெறும் ரூ.211. 48 கோடிதான். மொத்த தேவை எவ்வளவு தெரியுமா? ரூ.11400 கோடியாகும். இன்னும் ரூ.11188 கோடி செலவு செய்தால் தான் 8 திட்டங்களும் நிறைவேறும். அதிமுக அரசும் நிலங்களை கையகப்படுத்தி ரயில்வேயிடம் ஒப்படைக்க வேண்டும். மோடி அரசு பணம் தரவேண்டும். ஆனால் கடந்த ஐந்தாண்டு கால ‘சௌக்கிதார்’ ஆட்சியில் இதில் எதுவும் நடக்கவில்லை.இப்படிப்பட்ட அரசுதான் வளர்ச்சியை பற்றி வாய்கிழியப் பேசுகிறது.


  தமிழக புதிய ரயில்பாதை திட்டங்கள் தொடக்க ஆண்டு   5ஆண்டுகளில் செய்த செலவு    மொத்த தேவை   


1.திண்டிவனம்-திருவண்ணாமலை     2006-07       ரூ.20.50 கோடி    ரூ.900கோடி


2.திண்டிவனம்-நகரி 2006-07  ரூ.51.01 கோடி ரூ.2300கோடி   


3.அத்திப்பட்டு-புத்தூர் 2008-09 ரூ.8.44 கோடி ரூ.1105கோடி   


4.ஈரோடு–பழனி 2008-09 ரூ.0.57 கோடி ரூ.1140கோடி  


5.சென்னை-மகாபலிபுரம்      

கடலூர் 2008-09 ரூ.1.19கோடி ரூ. 2300கோடி   


6. மதுரை-தூத்துக்குடி 2011-12     ரூ.128.02கோடி ரூ.1800கோடி


7. திருப்பெரும்புதூர்-

 கூடுவாஞ்சேரி, திருப்பெரும்புதூர்- 2013-14 ரூ.0.65 கோடி ரூ.1500 கோடி

 இருங்காட்டுக்கோட்டை

  


8. மொரப்பூர்- தருமபுரி 2016- 17 ரூ.1.10கோடி ரூ.360கோடி




மொத்தம் ரூ.211.48கோடி ரூ.11400கோடி





இந்த தகவலில் சந்தேகமா? 26.12.18 அன்ற மக்களவையில் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினர் பி.ஆர்.செந்தில் நாதனுக்கும், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆர்.கே.பாரதி மோகனுக்கும் அளித்த பதிலைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் வளர்ச்சியின் லட்சணம் புரியும். 


ஆர்.இளங்கோவன்









;