சென்னை,ஜன.11- ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் 3800 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிராம் தங்கம் சனிக் கிழமையன்று 20 ரூபாய் உயர்ந்து 3820 ரூபாய்க்கு விற்பனையானது. இதே போன்று 30,400 ரூபாய்க்கு விற்பனையான ஒரு சவரன் தங்கம் 160 ரூபாய் உயர்ந்து 30,560 ரூபாய்க்கு விற்பனையானது. இதே போன்று 50 ரூபாய் 10 காசுகளுக்கு விற்பனையான ஒரு கிராம் வெள்ளி 50 காசுகள் உயர்ந்து 50 ரூபாய் 60 காசுகளுக்கு விற்பனையானது. சர்வதேச சந்தையில் நிலவும் விலை ஏற்றத்தால் சென்னையிலும் தங்கம் விலை உயர்ந்துள்ள தாகவும், இந்த விலை உயர்வு மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்றும் வியாபாரி கள் தெரிவித்துள்ளனர்.