tamilnadu

img

குளோபல் இண்டர்நெட் சர்வரில் 9 இந்திய மொழிகளில் இணையதள முகவரி வசதி!

குளோபல் இன்டர்நெட் சர்வரில் 9 இந்திய மொழிகளில் இணையதள முகவரிகளைப் பதிவு செய்வதற்கான வசதி ஜூன் மாதத்துக்குள் தயாராகிவிடும் என்று சர்வதேச அளவில் மொழிகளை ஏற்கும் குழு (யுஏஎஸ்ஜி) அறிவித்துள்ளது.

தற்போது இணையதள முகவரிகள் ஆங்கிலம் அல்லாத பிற மொழிகளிலும் குறிப்பாக மான்ட்ரின், அராபிக், ரஷிய மற்றும் தேவநாகரி உள்ளிட்ட மொழிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளன.

இருப்பினும் இணையதள முகவரிகளை நிர்வகிக்கும் இறுதி நிலை டொமைன், எழுத்தின் சில வடிவமைப்புகளை மட்டுமே ஏற்கும் வகையில் உள்ளது. தற்போது தேவநாகரி எழுத்து வடிவங்களை இணையதள முகவரியாக இடம்பெறச் செய்ய முடியும். ஆனால், இது டாட் பாரத் என்ற எழுத்து வடிவத்தின் விரிவாக்கமாக மட்டுமே இடம்பெற்றுள்ளது.

தற்போது, 9 இந்திய எழுத்து வடிவங்கள் அதன் பிரதான சர்வரில் (ஐசிஏஎன்என் – இன்டர்நெட் கார்ப்பரேஷன் ஃபார் அசைன்டு நியூஸ் அண்ட் நெம்பர்ஸ்) பதிவு செய்யப்படுவதற்கான வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவை பெங்காலி, தேவநாகரி, குஜராத்தி, குர்முகி, கன்னடம், மலையாளம், ஒரியா, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகியவை ஆகும்.

எல்ஜிஆர் எனப்படும் 9 மொழிக்கான எழுத்து வடிவங்களை சேர்க்கும் பணி 3 மாதங்களில் நிறைவடையும் என்று தெரிகிறது. இதையடுத்து ஐசிஏஎன்என்-ல் ஜூன் மாதத்தில் இது இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு எல்ஜிஆரில் இந்திய எழுத்துகளின் பிரதான வடிவமைப்புகள் பயன்பாட்டுக்கு ஏற்றபடி சேர்க்கப்பட்டு, அது ஐசிஏஎன்என்-ல் அங்கீகரிக்கப்பட்டு இடம் பெறவும் வழிவகை செய்யப்படும். 

ரூட் சர்வரில் இடம்பெற்றிருக்கும் எல்ஜிஆர், இந்தியா மொழிகளின் எழுத்து படிவத்தை கண்டறிந்து பயனர்களின் விருப்பத்திற்கு ஏற்ப இணையதள முகவரிகளை தேர்ந்தெடுக்க முடியும் என்று சர்வதேச அளவில் மொழிகளை ஏற்கும் குழுவின் தலைவர் அஜய் தத்தா தெரிவித்துள்ளார்.