tamilnadu

img

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி 2 ஆம் கட்ட சோதனை வயதானவர்களுக்கு நல்ல முடிவுகளை கொடுக்கிறது -  லான்செட் ஆய்வு

இங்கிலாந்தின் கொரோனா தடுப்பூசி 56 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஆரோக்கியமானவர்களுக்கு வலுவான நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது.  இது 18 முதல் 55 வயதுடையவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் வெளியாகியுள்ளது.

ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி இந்திய மருந்து தயாரிப்பாளரான சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) இணைத்து தயாரித்துள்ளது. இந்த தடுப்பூசிக்கான 2 ஆம் கட்ட மருத்துவ பரிசோதனைகள் இந்தியாவிலும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த பரிசோதனைகள் மற்றும் ஆய்வின் முடிவுகள் மருத்துவ இதழான லான்செட்டில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில், ஆசிரியர்கள் நோய் எதிர்ப்பு சக்திகளை சார்ஸ் மற்றும் கோவிட் 19 ஆகியவற்றிக்கு பாதுகாப்போடு தடுக்கிறது ஊக்கமளிப்பதாக கூறுகிறார்கள். ஆனால், இது 3 ஆம் கட்ட சோதனை முடிந்த பின்னரே உறுதிப்படுத்த முடிவும். தற்போது, நடத்தப்பட்ட சோதனையானது 18 வயது முதல் 55 வயது வரையும், 56 முதல் 69 வரைவும், 70 வயதிற்கும் மேற்பட்டவர்கள் என தனித்தனியாக சோதனை செய்யப்பட்டது. தடுப்பூசி வயதானவர்களுக்கு 28 நாட்களுள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இது தடுப்பூசி போட்ட 14 ஆவது நாளில் இருந்து உயர தொடங்குகிறது. கொரோனா உலக மக்கள் தொகையில் தற்போதுள்ள நிலையில், மிகப் பெரிய ஆபத்தை கொடுத்துள்ளது. அதுவும், வயதானவர்களுக்கு மிகவும் ஆபத்தாக இருப்பதாக ஆய்வு கூறுகிறது.

இந்த வாரத்தில் மூன்று தடுப்பூசிகளான ஃபைசர்-பயோஎன்டெக், மாடர்னா மற்றும் ஸ்புட்னிக் ஆகியவை 3 ஆம் கட்ட சோதனையில் நல்ல முடிவுகளை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 64 வயதுக்கு மேற்பட்டவர்களில் 94 சதவீதம் பேர் கொரோனாவில் இருந்து பாதுகாக்கலாம் என ஆய்வு கூறியுள்ளது.
 

;