tamilnadu

img

ஆப்கானிஸ்தான் தீவிரவாத தாக்குதலில் 12 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பு தாக்குதலில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பல்கலைக்கழகத்திற்கு வெளியே தேர்வு  எழுத மாணவர்கள் காத்திருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக பல்கலைக்கழகத்திற்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்த குண்டு வெடித்தது. இந்த தாக்குதல் சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.  
இந்நிலையில் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு தாலிபன் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.