tamilnadu

img

ஆந்திரா: வேன் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து -6 பேர் பலி

ஆந்திராவில் வேன் லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

ஆந்திரப்பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள யரகுண்டலப்பள்ளே கிராமத்தில் கதிரி-மதனப்பள்ளே நெடுஞ்சாலையில் இன்று காலை மினி வேன் கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. தகவலறிந்து சமத்துவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள், வேனில் இருந்தவர்களை மீட்டுள்ளனர். இதையடுத்து மீட்கப்பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 8 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விபத்து குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.