tamilnadu

img

மாட்டுக்கறி விற்ற முதியவரை பன்றிக்கறி உண்ண சொன்ன கொடூரம்

அஸ்ஸாமில் மாட்டுக்கறி விற்ற முதியவரை பன்றிக்கறி உண்ணச் சொன்ன கொடூரம் அரங்கேறி உள்ளது. இச்சம்பவம் குறித்து வீடியோ பதிவு சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அஸ்ஸாமின் பிஸ்வனாத் சரியாலி நகரத்தில் ஷவுகத் அலி (68) என்பவர் கடந்த 35 ஆண்டுகளாக அங்குள்ள சந்தையில் அசைவ உணவகம் நடத்தி வருகிறார். இந்நிலையில் அங்கு வந்த இந்துத்துவா கும்பல்அவர் மாட்டுக்கறி வைத்திருந்ததாக கூறி. அவரை கடுமையாக தாக்கியது. மேலும் அவரை பன்றிக் கறி சாப்பிடச் சொல்லி கட்டாயப்படுத்தியது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் அவர் தரையின் மண்டியிட்டு அமர்ந்துள்ளார். அவர் மீது புழுதி காணப்படுகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து தாத்திரியில் அக்லக் தொடங்கி இதுவரை மாட்டுக்கறி வைத்திருந்ததாக பசு குண்டர்களால் பலர் கொலை செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்றத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்துத்துவாவினரின் இந்த நடவடிக்கை நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.