அரியலூர்: அரியலூர் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மார்க்கெட் நுழைவு வாயில் இருபுறங்களிலும் காய்கறி மற்றும் குப்பைக் கழிவுகள் கொட்டப்பட்டு குவிந்து கிடக்கின்றன. பல மாதமாக அகற்றப்படாமல் கிடப்பதால கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கடும் பாதிப்படைகின்றனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், அரியலூர் நகராட்சி ஆணையர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் பொதுமக்கள், மார்க்கெட் வியாபாரிகளை ஒன்றிணைத்து போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கட்சியின் அரியலூர் ஒன்றியச் செயலாளர் துரை.அருணன் தெரிவித்துள்ளார்.