tamilnadu

img

மக்காச்சோளத்தையே காக்க முடியாதவர்கள் மக்களை எப்படிக் காப்பார்கள்

உலக அளவில் அமெரிக்கா விற்கு போட்டியாக பல நாடுகளில் மக்காச்சோளம் உற்பத்திசெய்வதால் மக்காச்சோள விவ சாயத்தை அழிக்க அமெரிக்கா திட்டமிட்டது. ஏனெனில் விதைகளுக்கு பெரும்பாலும் அமெரிக்ககம்பெனிகளையே சார்ந்து விவ சாயிகள் உள்ளனர். 2016ம் ஆண்டு அமெரிக்காவில் பயிரிடப்பட்ட மக்காச்சோள பயிரை ஒரு வகை பூச்சி தாக்கியுள்ளது. இதனால் விவசாயிகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டனர். 2017ம் ஆண்டு ஆப்பிரிக்காவில் மக்காச்சோள பயிரை தாக்கியது. 


ஆசியா கண்டத்தில் முதன் முதலாக 2018 மே மாதத்தில் கர்நாடக மாநிலத்தில் சிவமோகா, சிக்கப்பல்லபூர் பகுதி உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் மக்காசோளத்தை பூச்சி தாக்கியதை கண்டறிந்து ஆய்வு செய்தபோது, அது ஆப்பிரிக்காவில், அமெரிக்காவில் தாக்கிய பூச்சிஎன்று முடிவு செய்தனர். இந்த பூச்சியின் பெயர் பால் ஆர்மிவோர்ம்.இப்பூச்சி தமிழகத்திலும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் மக்காச் சோளத்தை அழித்தது. விவசாயிகள் நிலைகுலைந்தனர். ஆனால், இதில் இருந்து கூட விவசாயிகளைப் பாது காக்க மோடி அரசோ, எடப்பாடி அரசோ முன்வரவில்லை. பூச்சியைக் கூட தடுக்காதவர்களின் ஆட்சியை விட்டுவைக்கலாமா?


- கே.பி.பெருமாள்

;