tamilnadu

img

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் போனை ஹேக் செய்த சவுதி

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் போனை சவுதி ஹேக் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அமேசான்  மற்றும் வாஷிங்டன் போஸ்ட் ஆகியவற்றின் நிறுவனரான ஜெஃப் பெசோஸின் வாட்ஸ்அப்பிற்கு, கடந்த 2018 ஆம் ஆண்டு தொடக்கத்தில் சவுதி இளவரசர் சல்மானிடமிருந்து ரகசியக் கோப்பு ஒன்று அனுப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவரது போன் ஹேக் செய்யப்பட்டது. ஜெஃப் பெசோஸால் நியமிக்கப்பட்ட தொழில்நுட்ப நிபுணர்கள், ஹேக் செய்யப்பட்டதின் பின்னணியில் சவுதி இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். மேலும், அவரது போனிலிருந்த பல ரகசியப் புகைப்படங்கள், பல முக்கியத் தகவல்கள் திருடப்பட்டதாக வலுவான குற்றச்சாட்டு எழுந்துள்ளன. இந்தக் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்று சவுதி தரப்பு மறுத்துள்ளது. 

ஆனால், இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிபை ஜெஃப் பெசோஸ் தரப்பிலிருந்து இதுவரை தெரிவிக்கப்படவில்லை. ஆனால், தனது ட்விட்டர் பக்கத்தில் கொல்லப்பட்ட சவுதி பத்திரிகையாளர் ஜமாலின் நினைவிடத்திற்குச் சென்ற புகைப்படத்தை சவுதி மீதான குற்றச்சாட்டிற்கு பிறகு ஜெஃப் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

;