states

img

ராகுல் காந்தி யாத்திரையில் அகிலேஷ்

காங்கிரஸ் முன்னாள் தலைவ ரும், எம்பியுமான ராகுல்  காந்தியின் 2-ஆம் கட்ட யாத்திரையான “இந்திய ஒற்றுமைக் கான நீதி யாத்திரை” தற்போது உத்தரப்பிர தேச மாநிலத்திற்குள் சென்று கொண்டு இருக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் பாஜக வலுவாக  உள்ளதாக கூறப்பட்டாலும், காங்கிரஸ் யாத்திரை செல்லும் இடங்களெல்லாம் மக்கள் அமோக வரவேற்பு அளித்து வரு வதால், யாத்திரை மக்கள் கூட்டத்தில் மிதந்து செல்கிறது.

 ஞாயிறன்று ராகுல் காந்தி யாத்திரை உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவிற்கு வந்தடைந்த நிலையில், இந்த யாத்திரை யில் “இந்தியா” கூட்டணியில் அங்கம் வகிக்கும் சமாஜ்வாதி கட்சியின் தலைவ ரும், முன்னாள் முதல்வருமான அகிலேஷ்  மற்றும் சமாஜ்வாதியின் அனைத்து முக்கிய  தலைவர்கள், தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

 சமாஜ்வாதி, இடதுசாரிகள் உள்ளிட்ட “இந்தியா” கூட்டணிக் கட்சிகளின் தொண்  டர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் ஆக்ராவில் குவிந்து ராகுல் யாத்திரைக்கு வரவேற்பு அளித்தனர். இதனால் ஆக்ராவின் அனைத்து முக்கிய  சாலைகளும் பல மணிநேரம் போக்கு வரத்து நெரிசலில் சிக்கியது.