லக்னோ, ஜுன் 2 - 2024 மக்களவைத் தேர்தலில், பாஜக-வுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஓரணியில் திரட்டும் முயற்சியாக, பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதாதளத்தின் தலைவருமான நிதிஷ் குமார், ஜூன் 12 அன்று பாட்னாவில் மாபெரும் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணாமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, திமுக, ஆம் ஆத்மி, ஆர்ஜேடி, சிவசேனா (உத்தவ்), உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சமாஜ்வாதி தலைவரும், உத்தரப் பிரதேச எதிர்க்கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.