states

மிசோரம் மாநிலத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை

40 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட வடகிழக்கு மாநிலமான மிசோராத்தில் நவம்பர் 7 அன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 80.66 சதவீத வாக்குகள் பதிவாகிய நிலையில், தெலுங்கானா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் 4 மாநிலங்களோடும் ஞாயிறன்று மிசோரம் மாநிலத்தில் பதிவாகிய வாக்குகள் எண்ணப்பட இருந்தன. ஆனால் மிசோரம் மாநிலத்தில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வசிப்பதால் ஞாயிறன்று தேவாலயம் செல்லும் வேலையை தீவிர வேறு வேலை செய்ய மாட்டார்கள் என்பதால், வாக்கு எண்ணிக்கை நாள் டிசம்பர் 4-க்கு மாற்றப்பட்டது. 

இந்நிலையில், திங்களன்று மிசோராம் மாநிலத்திற்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. மிசோரம் மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க 21 இடங்கள் தேவை என்ற நிலையில், ஆளும் எம்என்எப், இசட்பிஎம் கட்சிகளிடையே கடும் போட்டி இருக்கும் என்றும், காங்கிரஸ் கட்சி கிங்மேக்கராக இருக்கும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகின.