states

img

மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்துக!

மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்த வேண்டும், அழிக்கப்பட்ட சொத்துக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில், மண்டல அளவிலான ஆர்ப்பாட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதனன்று நடைபெற்றது. கோவை சிவானந்தா காலனி பவர்ஹவுஸ் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், சிபிஎம் கோவை மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன், திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினர். கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மார்க்சிஸ்ட் கட்சியின் ஊழியர்கள் திரண்டு, பாதிக்கப்பட்ட மணிப்பூர் மக்களை பாதுகாக்கக்கோரி ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.