states

img

மணிப்பூர் ஆளுநருடன் இந்தியா கூட்டணி எம்.பிக்கள் சந்திப்பு

மணிப்பூர் சென்றுள்ள இந்தியா கூட்டணி எம்.பிக்கள் அம்மாநில ஆளுநர் அனுசுயா உய்கேவை இன்று சந்தித்தனர்.

மணிப்பூரில் மைதேயி, குக்கி சமூகத்தினர் இடையே நிலவும் மோதலால், அந்த மாநிலத்தில் இரண்டு மாதங்களுக்கு மேலாக பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

இந்த நிலையில், மணிப்பூர் சென்றுள்ள இந்தியா கூட்டணி எம்.பிக்கள் அம்மாநில ஆளுநர் அனுசுயா உய்கேவை இன்று சந்தித்தனர்.முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை இந்தியா கூட்டணி எம்.பிக்கள் நேற்று சந்தித்த நிலையில், இன்று ஆளுநரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அப்போது, மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.