மும்பை எல்ஐசி அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள சான்டாக்ரூஸ் பகுதியில் செயல் பட்டு வரும் இந்திய காப்பீட்டு கழகத்தின் அலுவலக கட்டிடத்தில் இன்று காலை 6.45 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அலுவலகத்தின் 2வது மாடியில் செயல்பட்டு வந்த சம்பவ சேமிப்பு திட்டம் பிரிவில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து 8 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்பட்டவில்லை. இந்நிலையில் தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.