states

img

வேளாண் சட்டங்களுக்கு எதிராக மகாராஷ்டிராவில் விவசாயிகள் பேரணி.....

மும்பை:
 வேளாண் சட்டங்களுக்கு எதிராக மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஞாயிறன்று பேரணி நடத்தினர்.

மும்பையிலிருந்து நாசிக் பகுதி வரை நடைபெறும் இந்த பேரணியில் ஏராளமான விவசாயிகள் கையில் கொடியுடன் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தில்லி நகரின் எல்லைகளில் பஞ்சாப், ஹரியானா,உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 60 நாட்களுக்கும்மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் தில்லி நோக்கி சென்றவண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக அனைத்திந்திய கிஷான் சபாவின் சார்பில் மும்பையிலிருந்து நாசிக் பகுதி வரை பிரம்மாண்ட  பேரணி தொடங்கியுள்ளது. தில்லியில்போராட்டத்தை நடத்தி வரும் சம்யுக்தா கிஷான் மோர்ச்சா அழைப்பின் பெயரிலும் இந்த பேரணி நடத்தப்பட்டது.மும்பையில் பல்வேறு பகுதிகளி லிருந்து ஏராளமானோர் இந்த பேரணியில்கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படு கிறது. பேரணியானது அசாத் திடலில் சென்று நிறைவடையும் என்றும், அங்கு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 25-ஆம் தேதி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்று மனு அளிக்கப்படும் என்றும் ஜனவரி 26-ஆம் தேதி ஆசாத் திடலில் கொடியேற்றம் நடைபெறும் என்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

தில்லி நோக்கி விவசாயிகள் வருகை
ஜனவரி 26 அன்று நடைபெறுகின்ற டிராக்டர் பேரணியில் கலந்துகொள்வதற்காக ஏராளமான விவசாயிகள் தில்லி நோக்கி வந்து கொண்டிருப்பதாக விவசாய சங்கங்கள் தெரி வித்துள்ளன.விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் காவல் துறை அதிகாரிகளுக்கும் இடையே சனிக்கிழமை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு காவல்துறையினர் அனுமதி வழங்கினர்.இதனைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து டிராக்டர் பேரணியில் பங்கேற்பதற்காக விவசாயிகள் வந்தவண்ணம் உள்ளதாகவும்  தில்லி வெளிவட்டச் சாலையில் திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி நடைபெறும் என்றும் பஞ்சாப் கிஷன் சங்கர்ஷ் கமிட்டியைச் சேர்ந்த சதனம் சிங் பனு தெரிவித்தார். 
 

;