tamilnadu

img

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து திருவாரூரில் விவசாயிகள் பேரணி

திருவாரூர், ஜூலை 23- திருவாரூரில் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் மாபெரும் பேரணி நடத்தப்பட்டு, திரு வாரூர் மாவட்ட ஆட்சியர் த.ஆனந்தி டம் கோரிக்கை மனு அளிக்கப் பட்டது. முன்னதாக, போராட்டக்குழு வினர் திருவாரூர் புதிய பேருந்து நிலையம் முன்பாக ஒன்று கூடினர். இதில் பல்வேறு விவசாய சங்கங் கள், திமுக, காங்கிரஸ், திக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அமமுக, மக்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்த வர்கள் பங்கேற்றனர். திருவாரூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட பேரணி, விளமல், தண் டலை வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சென்றது. பின்னர் முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு, அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக் குள் சென்று மனு அளித்தனர். இந்த போராட்டத்தையொட்டி திருவாரூர் புதிய பேருந்து நிலையம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்த பேரணியில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் (சிபிஎம்) மாநிலத் தலைவர் வி. சுப்பிரமணியன், தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் (சிபிஐ) மாநில துணைச் செயலர் பி.எஸ். மாசிலாமணி, தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் கிருஷ்ண மணி, விவசாயிகள் நலச் சங்கச் செய லர் ராமமூர்த்தி. காவிரி டெல்டா பாது காப்பு கூட்டியக்கத்தின் நிர்வாகிகள் வி.எஸ்.கலியபெருமாள்(சிபிஎம்),  தேசபந்து (திமுக), துரைவேலன் (காங்), வடிவழகன், செல்வம் (விசிக), கோபல்(திக), ராஜேந்தி ரன் (மதிமுக), ராமமூர்த்தி (விவசாயி கள் சங்கம்) உட்பட ஆயிரக்கணக்கா னோர் கலந்து கொண்டனர்.

;