பெங்களூரு, அக்.29- கர்நாடகா மாநிலம் பெங் களூருவில் கர்நாடக முதல் வர் பசவராஜ் பொம்மையின் புகைப்படத்துடன் “பே சிஎம்” (“PayCM”) என்ற தலைப்பு டன் போஸ்டர்கள் ஒட்டப் பட்டுள்ளன. பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு காண்ட்ராக்ட் பணி களில், அரசுப் பணி வேலை வாய்ப்பில் 40 சதவீதம் கமி ஷன் பெறுவதாக குற்றம் சாட்டி பசவராஜ் பொம்மை புகைப்படத்துடன் கூடிய போஸ்டரில் கியூஆர் குறி யீடோடு “40 சதவீதம் இங்கே ஏற்றுக்கொள்ளப்பட்டது” என்ற வாசகம் இடம் பெற் றுள்ளது. இது தொடர்பாக செய்தி யாளர் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர்கள் டி.கே. சிவக்குமார், சித்த ராமையா ஆகியோர் “கர் நாடகத்தில் பாஜக-வின் ஊழ லுக்கு எதிராக வீடியோ பிரச்சாரம் தொடங்கப்பட் டுள்ளது. 40 சதவீத அரசாங் கம் என்றால் அது ஊழல் பாஜக அரசு தான் என்ற கருப் பொருளைத் தாங்கி இந்த வீடியோ வெளியிடப்பட்டுள் ளது என்றனர். கடந்த மாதம் செப்டம்பர் 13- ஆம் தேதி, பாஜக அர சியல் “40 சதவீத ஊழல்” என்ற பிரச்சாரத்தை காங்கி ரஸ் கட்சி தொடங்கியது குறிப் பிடத்தக்கது.