states

ஒரு இந்துப் பெண்ணை நாம் இழந்தால், பதிலுக்கு 10 முஸ்லிம் பெண்களை காதலில் வீழ்த்த வேண்டும்!

பெங்களூரு, பிப். 21 - “’லவ் ஜிகாத்’தில் ஒரு இந்து பெண்ணை இழந்தால், பதிலுக்கு 10 முஸ்லிம் பெண்களை இந்து ஆண்கள் காதல் வலையில் வீழ்த்த வேண்டும்” என்று ஸ்ரீராம் சேனா தலைவர் பிரமோத் முத்தாலிக் பேசியுள்ளார். கர்நாடகா மாநிலம் பாகல்கோட் மாவட்ட த்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இதுதொடர்பாக அவர் மேலும் பேசியிருப்பதாவது: “நம் நாட்டில் நடைபெறும் லவ் ஜிகாத் குறித்து உங்களுக்கு தெரிந்திருக்கும் என  நினைக்கிறேன். இந்துப் பெண்களை காத லித்து மதம் மாற்றும் செயல்கள் அதிகரித்து வருகின்றன. லவ் ஜிகாத்தில் ஒரு இந்து பெண்ணை நாம் இழந்தால், 10 முஸ்லிம் பெண்களை இந்து ஆண்கள் காதல் வலை யில் வீழ்த்த வேண்டும். அவ்வாறு நீங்கள் செய்தால் உங்களுக்கு ஸ்ரீராம் சேனா அமைப்பு துணை நிற்கும். உங்களுக்கான வேலை வாங்கித் தருவதில் இருந்து அனைத்து சமூக பாதுகாப்புகளையும் ஸ்ரீராம் சேனா வழங்கும் என்பதை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன். ‘லவ் ஜிகாத்’ என்ற பெயரில் நமது இந்து பெண்களை ஏமாற்றுபவர்களுக்கு இப்படிதான் நாம் எச்சரிக்கை விடுக்க வேண்டும். அப்போதுதான் அந்த வலி அவர்களுக்கு தெரியும்.  என் மீது 109 வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை பாஜக ஆட்சியில் பதிவு செய்யப்பட்டவை. இந்துத்துவா கொள்கையில் தீவிரமாக இருப்ப தால் நமது மக்களே எனக்கு பல இடையூறு களை தருகிறார்கள். அதனால்தான், வரும் கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் பாஜக-வை எதிர்த்து உடுப்பியின் கர்கலா தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளேன். பாஜக சார்பில் போட்டியிடுமாறு அக்கட்சியைச்  சேர்ந்தவர்கள் என்னை கேட்டுக்கொண்டார் கள். ஆனால் அதற்கு நான் ஒத்துக்கொள்ள வில்லை. பாஜக-வின் போலி இந்துத்துவாவை நான் ஆதரித்திருந்தால், பல விஷயங்களை நான் சாதித்திருக்கலாம். ஆனால், அதில் எனக்கு விருப்பம் இல்லை.