states

img

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு கர்நாடக பாஜக அரசு தடை? சும்மா இருக்க மாட்டோம் என எம்எல்ஏ பசனகவுடா மிரட்டல்....

பெங்களூரு:
கொரோனாவைக் காரணம் காட்டி, விநாயகர்சதுர்த்தி கொண்டாட்டங்களைத் தடுத்தால், அமைதியாக இருக்க மாட்டோம் என்று கர்நாடகமாநில பொம்மை அரசுக்கு பாஜக எம்எல்ஏ பசனகவுடா பாட்டீல் யத்னால் மிரட்டல் விடுத்துள்ளார்.

கர்நாடகத்தில் முதல் அலையை காட்டிலும் கொரோனா 2-வது அலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. அதிக மரணங்கள் நிகழ்ந்தமாவட்டங்களின் பட்டியலில், மகாராஷ்டிரா தலைநகர் மும்பையை (15 ஆயிரத்து 930) பின்னுக்குத்
தள்ளி, கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு ஊரகப் பகுதி (15 ஆயிரத்து 953)நாட்டிலேயே இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதனால்தற்போதும் கர்நாடகத்தில் கொரோனா கட்டுப் பாடுகள் தொடர்கின்றன. பல்வேறு பகுதிகளில் இரவு நேர ஊரடங்கும் அமலில் உள்ளது.

இதனை கருத்தில் கொண்டே ஆகஸ்ட் 20-ஆம் தேதி மொகரம் பண்டிகைக்கும், செப்டம்பர்10-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கும்அண்மையில் கர்நாடக அரசு கட்டுப்பாடுகளை விதித்தது. பொது இடங்களில் மொகரம், விநாயகர் சதுர்த்தி விழாக்களை கொண்டாடுவதற்கு தடை விதித்தது.மொகரத்தின் போது, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தொழுகைகளில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதுடன், பொது இடங்களில் ஒருவரை
யொருவர் கட்டி அணைத்து வாழ்த்து கூறுவதற்குத் தடை விதிக்கப்பட்டது. அதேபோல் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை பொதுமக்கள் தங்களின் வீடுகளில் கொண்டாட வேண்டும். பொதுஇடங்களில் பந்தல் போட்டு விநாயகர் சிலையைவைக்க அனுமதி கிடையாது என்று அரசு கூறியது.இதற்குத்தான் பாஜக எம்எல்ஏ பசனகவுடா பாட்டீல் யத்னால் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். “விநாயகர் சதுர்த்தி வரும் போதுதான், கொரோனா நினைவுக்கு வருகிறதா? எங்கள்பண்டிகைக்கு முட்டுக்கட்டை போட்டால், அமைதியாக இருக்கமாட்டோம்’’ என்று விஜயபுராவில் பேசுகையில் கொந்தளித்துள்ளார்.

“அரசியல்வாதிகளின் கூட்டம், நிகழ்ச்சிகள், அமைச்சர்களின் வெற்றி கொண்டாட் டங்களுக்கு, இல்லாத கொரோனா விதிமுறை, விநாயகர் சதுர்த்திக்கு மட்டும் வந்து விடுகிறதா? எதற்காக 50 கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்?” என்று கேட்டுள்ள அவர், “விநாயகர் சிலை வைக்க யாரும் பயப்படாதீர்கள். கொரோனாவுக்கும் யாரும் பயப்பட வேண்டாம்” என்று தூண்டி விட்டுள்ளார். “விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவோர் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது” என்று கர்நாடக பாஜக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கும் அவர் ‘உத்தரவு’ போட் டுள்ளார்.

;