states

ஹிஜாப்பைத் தொடர்ந்து ஹலால் இறைச்சிக்கு தடை விதிக்க கர்நாடக பாஜக அரசு முடிவு!

பெங்களூரு, டிச. 20 - கர்நாடகாவில் ஹலால் இறைச்சிக்குத் தடை விதிக்கும் வகையில் புதிய சட்ட மசோதாவைக் கொண்டுவர அம்மாநில பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் கள் வெளியாகியுள்ளன. கர்நாடகத்திலுள்ள பசவராஜ் பொம்மை  தலைமையிலான பாஜக அரசானது, அங்குள்ள இஸ்லாமியர் உள்ளிட்ட சிறு பான்மையினரை குறிவைத்து மதமாற்றத் தடை, ஹிஜாப் அணிவதற்கு தடை என்று  வகுப்புவாத நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. இந்த வரிசையில் ஹலால் இறைச்சிக்கும் தடை விதிக்க பசவ ராஜ் பொம்மை அரசு முடிவு செய்துள்ளது. கர்நாடகாவில் ஹலால் இறைச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம் உள்ளிட்ட இந்துத்துவா கூட்டம், நீண்ட காலமாகவே கூறி வருகின்றனர்.

இதுதொடர்பாக, கர்நாடக  ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டிற்கு, பாஜக எம்எல்சி ரவிக்குமார் அண்மையில் கடிதம் ஒன்றையும் எழுதினார். அதில், “இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையம் சான்ற ளிக்கும் உணவை தவிர வேறு எந்த அமைப்பும் சான்றளிக்கும் உணவை விற்பனை செய்ய அனுமதிக்கக் கூடாது” என்று குறிப்பிட்டிருந்தார். “மதத்தை முன்வைத்து உருவாக்கப்படும் ஹலால் உணவுக்கு தடை விதிக்க வேண்டும்” என்றும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில்தான், ஹலால் இறைச்சி க்கு தடை விதிக்கும் மசோதாவை, தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாடாளு மன்றக் குளிர்கால கூட்டத்தொடரிலேயே அறிமுகப்படுத்த முடிவெடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.  ‘‘சிலர் அதிகாரப்பூர்வமற்ற சான்றிதழை முன்வைத்து இறைச்சி சந்தையை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

இதனால் பெரும்பான்மையான வியாபாரிகள் பாதிக்கப் படுகின்றனர். அவர்களிடம் இருந்து சந்தை யை முழுமையாக மீட்கும் வகையில் சட்டமசோதா கொண்டுவர முடிவெடுத் துள்ளோம். அதனை நடப்புத் தொடரில் நிறை வேற்ற இருக்கிறோம்’’ என்று வெளிப்படை யாகவே முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். இந்த மசோதாவை, ரவிக்குமார் எம்எல்சி  தனிநபர் மசோதாவாக கொண்டுவருவார் என்று கூறப்படுகிறது. ஆனால், ஹலால் மசோதாவை பாஜக அரசு கொண்டுவந்தால் அதனை எதிர்க்கப் போவதாக காங்கிரஸ் தலைவர் டி.கே.  சிவகுமார் கூறியுள்ளார். இது வாக்கா ளர்களை மத ரீதியாக பிளவுபடுத்தும் முயற்சி என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.