states

img

வெயிலால் அவதிபடும் சுற்றுலாப் பணிகள்

புதுச்சேரி, மார்ச் 6- புதுவை - கடலூர் சாலையில் உள்ள நோணாங்குப்பம் படகு குழாமில் வார விடுமுறை உள்ளிட்ட அரசு விடுமுறை நாட்களில் படகு சவாரி செய்ய ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அதேபோல் ஞாயிறன்றும் ஏராளமான சுற்றுலா பயணிகள் படகு குழாமில் குவிந்திருந்தனர். இதனால் படகிற்காக நீண்ட வரிசையில் சுற்றுலா பயணிகள் காத்திருந்தனர். நிழற்குடை இல்லாததால் அவர்கள் நீண்டநேரம் வெயிலில் அவதிப்பட்டனர். எனவே இங்கு நிழற்குடைகள் அமைக்க  வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த சனி ஞாயிறு ஆகிய 2 நாட்களில் மட்டும் படகு குழாமில் 9 லட்ச ரூபாய் வசூல்  ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.