புதுச்சேரி, ஜன. 7- புதுச்சேரி உருளையன் பேட்டை காவல் துறை யினர் வினோபா வீதி சந்திப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினி வேனை மடக்கி சோதனை செய்தனர். இதில்,வேனில் இருந்த 2 பார்சல்களை பிரித்து பார்த்த போது, அதில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான ஹான்ஸ், பான்மசாலா ஆகியவை இருந்தன. இதையடுத்து, மினி வேனை ஓட்டி வந்த ஓடுநரிடம் நடத்திய விசா ரணையில் இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.