states

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் உரிமைகளுக்கு தடை

புதுச்சேரி, ஜன. 28- புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தில் மாணவர்களின் உரிமை களுக்கு தடை போடுவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங் கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 8 ஆண்டுகால ஒன்றிய பாஜக ஆட்சியிலும், கடந்த இரண்டு ஆண்டுகால பாஜக, என்.ஆர் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி யிலும் புதுச்சேரி மக்கள் பெரும்  துன்பத்தை அனுபவித்து வரு கிறார்கள். மக்களின் வாழ்வாதா ரம், மத ஒற்றுமை கேள்விக்குறி யாகி வருகிறது. ஆர்.எஸ்.எஸ்,  பாஜகவின் அரசியல் நடவடிக்கை களால் மனித உரிமைகள் மீறப் பட்டு வருகிறது. இந்நிலையில் பி.பி.சி  நிறுவனம், 2 பாகங்கள் கொண்ட  “இந்தியா மோடிக்கான கேள்வி கள்” என்ற ஆவணப் படத்தை  தயாரித்துள்ளது. இந்த படம் இந்தியாவின் ஜனநாயகத்திற்கு எழுந்துள்ள சவாலை சுட்டிக் காட்டுகிறது. குஜராத் இனப்படு கொலையில் ஈடுபட்டவர்கள் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு  தொடர்ந்து விடுதலை செய்யப்படு கிறார்கள்.

இணையத்தில் பார்க்க முடி யாத ஆவணப்படத்தை ஆங்காங்கே பொதுமக்களும், ஜனநாயக அமைப்புகளும் திரை யிட்டு வருகிறார்கள். புதுச்சேரி யில் உள்ள மத்திய பல்கலைக் கழகத்தில், மாணவர்கள் ஆவணப் படம் திரையிடுவதை தடுக்கும் வகையில் பல்கலைக்கழக நிர்வாகம் மின்சாரம் மற்றும்  இணைய வசதியை துண்டித்துள் ளது. மேலும் பாஜக, ஏ.பி.வி.பி  குண்டர்கள் காவல்துறையின் உதவியுடன் பல்கலைக்கழ கத்திற்குள் அத்துமீறி நுழைந்து, மாணவர்களை பார்த்து சுட்டுத் தள்ளுங்கள் என்று இந்தியில் கத்தி வன்முறையில் ஈடுபட்டனர். ஆவணப்படத்தை பார்த்து தகவல்களை தெரிந்துகொண்டு அதன் மீது முடிவு எடுக்கும் உரிமை, இந்திய குடிமக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அடிப்படை யான உரிமையாகும். ஆனால் அடிப்படை உரிமைக்கு விரோத மாக காவல்துறையும், கல்வி  நிறுவனங்களும் செயல்பட் டுள்ளன. இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி மாநிலக்குழு வன்மையாக  கண் டிக்கிறது. மேலும் வன்முறையில் ஈடுபட்ட பாஜக, ஏபிவிபி குண்டர் களை கைது செய்ய வேண்டும். புதுச்சேரி முழுவதும் வாய்ப்புள்ள இடங்களில் இடது சாரி கட்சிகள், ஜனநாயக அமைப்புகள் இந்த ஆவணப் படத்தை திரையிடவும், அதன் மீதான விவாதத்தையும் முன்னெ டுக்க உள்ளோம். புதுச்சேரி அரசும், காவல்துறையும் இதற்கு உரிய அனுமதி அளித்து, மக்களின் அடிப்படை உரிமைகளை பாது காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

;