states

img

தனியார் போக்குவரத்து சிஐடியு கிளை உதயம்

புதுச்சேரி,அக்.10- சிஐடியு புதுவை பிரதேச  போக்குவரத்து தொழிலா ளர் சங்கத்தின் புதிய கிளை  பெயர் பலகை திறப்பு விழா வில்லியனூர் அடுத்து  உருவையாரில் நடை பெற்றது. கிளைத் தலைவர்  அஜித் தலைமை தாங்கி னார். தனியார் வாகன போக்குவரத்து தொழிலா ளர் சங்க புதுச்சேரி கவுரவத் தலைவர் ஆர்.ரவிச்சந்திரன் கலந்து கொண்டு பெயர் பலகையை திறந்து வைத்தார். முன்னதாக சங்கக் கொடியை பிரதேசத் தலை வர் அந்தோனிதாஸ் ஏற்றி னார். சங்கத்தின பொதுச்  செயலாளர் எம்.பி மதி வாணன் சங்க உறுப்பினர் களுக்கு அடையாள அட்டையை வழங்கினார். விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் பிரதேச செய லாளர் தமிழ்ச் செல்வன், நிர்வாகிகள் ராமமூர்த்தி, மணிபாலன், தியாகராஜன், சங்கத்தின் புதிய நிர்வாகி கள் ஏகநாதன், செல்வராசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

;