states

ஆரோவில்லில் சர்வதேச குதிரையேற்ற போட்டி

புதுச்சேரி, பிப். 26 சர்வதேச நகரான ஆரோவில்லில் ரெட் எர்த் குதிரையேற்ற பள்ளியில் வெளிநாடு மற்றும் பல மாநிலங்களை சேர்ந்தவர்கள் குதிரையேற்றத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர். ரெட்எர்த் பள்ளி சார்பில் நடப்பாண்டுக்கான குதிரையேற்ற போட்டி வரும் 1ஆம் தேதி தொடங்கி 6ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதுதொடர்பாக போட்டி அமைப்பாளர் ஜாக்குலின் கூறியதாவது: டிரஸ்ஸேஜ் எனப்படும் குதிரைகளின் அலங்கார நடைபோட்டி, ஷோ ஜம்பிங் பிரிவுகளில் சர்வதேச, தேசிய, குதிரையேற்ற வீரர்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்துகின்றனர். 3 கிராண்ட் பிரிக்ஸ் ஜம்பிங் பிரிவுகள் ஆகியவற்றில் போட்டிகள் நடைபெறுகிறது. பேசிக், பேசிக் ஒபன், அட்வான்ஸ்ட், அட்வான்ஸ்ட் ஒபன், மீடியம் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடைபெறும். போட்டியில் பங்கேற்க nஜர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் மற்றும் இந்தியா முழுவதிலும் இருந்து 80க்கும் மேற்பட்ட உயர்ரக குதிரைகள் புதுவை வருகின்றன. பிரான்ஸ், nஜர்மனி மற்றும் பெங்களூரு, புனே, தமிழகத்தின் தூத்துக்குடி, ஆம்பூர், கோவை, திருப்பூர், புதுவை ஆகிய இடங்களில் இருந்து குதிரையேற்ற வீரர்கள் கலந்து கொள்கின்றனர். வெளிநாடுகளில் இருந்து பயிற்சியாளர்களும் வருகின்றனர். போட்டியில் பங்கேற்கும் குறைந்த வயது போட்டியாளருக்கு வயது 6. உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்கள் ஏராளமானோர் இதில் பங்கேற்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.